Header Ads



முஸ்லிம் என்பதால் இனவாதிகள் வைக்கும் பொறி, நாசகாரத்தை அரங்கேற்ற சதி, மொட்டுக்கும் தொடர்பு

சிங்­க­ளத்தில்: ரசிக குண­வர்­தன
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்

இப­லோ­கம பிர­தே­சத்தில் தொல்­பொருள் சின்­னங்கள் அழித்து நாச­மாக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அப்­ப­குதி பிர­தேச செய­லா­ள­ராகக் கட­மை­யாற்றும் ஸஜீதா பானு தனது இன, மத தீவி­ர­வாதச் செயற்­பாட்­டினால் இவ்­வாறு தொல்­பொ­ருட்­களை அழித்து வரு­வ­தான கருத்­தாடல் இப்­போது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. தொலைக்­காட்சி ஊட­கங்கள் மற்றும் ஒரு சில அர­சி­யல்­வா­திகள், காவி­யுடை தரித்த தீவி­ர­வாத அமைப்­பு­களின் செய­லா­ளர்கள் போன்றோர் பரப்­புரை செய்­வது போன்று குறித்த காணியில் தொல்­பொ­ருட்கள் அழிக்­கப்­பட்­டுள்­ள­னவா என்­பதைக் கண்டு வரு­வ­தற்கு நாம் ( ராவய ஊட­க­வி­ய­லாளர்) இப­லோ­க­ம­வுக்குச் சென்றோம்.

இப­லோ­கம விடயம் இரண்டு ஊடக நிறு­வ­னங்­க­ளாலே ஊதிப் பெருப்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றது. அவர்­களால் சோடிக்­கப்­பட்ட அடிப்­படைவாத கருத்­து­கள்தான் பல­ரதும் கவ­னத்தை ஈர்த்­தன. அடிப்­படை வாதிகள் எல்லா இடங்­க­ளிலும் காணப்­ப­டு­கின்­றனர். அவர்கள் எந்­த­வொரு விட­யத்­தையும் தம் இலக்கை அடைந்து கொள்­வ­தற்­காக திசை­தி­ருப்பிக் கொள்­வதில் சமர்த்­தர்கள். இப­லோ­கம விட­யமும் மேற்­படி இன, மத வாதி­களின் தேவையை நிறை­வேற்றிக் கொள்­வதால் எழுந்த பிர­தி­ப­லிப்­பாகும். பிர­தேச செய­லாளர் ஒரு முஸ்லிம் பெண் என்­பதால் அது இன­வா­தி­களின் வாய்­க­ளுக்கு அவ­லா­கி­விட்­டது.

பஸ் பய­ணியின் கூற்று

நாம் கெகி­ரா­வை­யி­லி­ருந்து இப­லோ­க­ம­வுக்குச் செல்லும் பஸ் வண்­டியில் பய­ணிக்­கும்­போது அருகே அமர்ந்­தி­ருந்த ஓர் ஊர்­வா­சி­யிடம் இது விட­ய­மாகக் கதையைத் தொடுத்தோம். அவர் கூறி­ய­தா­வது “மனி­தர்­க­ளுக்கு வாய்க்கு வந்த கதை­க­ளை­யெல்லாம் பரப்ப முடியும். இப்­படிக் கிளப்­பப்­பட்ட கதையால் எல்­லோரும் பிர­தேச செய­லாளர் மீதே வசை­பா­டு­கின்­றனர். செய­லாளர் என்ற பத­வியில் இருந்­த­போதும் அவர் மாத்­திரம் இதற்கு உடந்தை என்று எடுத்த எடுப்­பி­லேயே குற்றம் சுமத்த முடி­யாது. சில சமயம் புதையல் தோண்டும் முயற்­சி­யா­கவும் இருக்­கலாம். எப்­ப­டி­யி­ருந்த போதிலும் தொலைக்­காட்­சி­யூ­டா­கத்தான் நாம் ஒரு சில விட­யங்­களைக் கண்­ட­றிந்து கொண்டோம்."

இப­லோ­கம பிர­தே­சத்­தி­லுள்ள குறைந்த வரு­மானம் பெறும் 48 குடும்­பங்­க­ளுக்கு வீடு­களை நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்­காக காணி­யொன்றை ஒதுக்கித் தரும்­படி வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபையால் இப­லோ­கம  பிர­தேச செய­லா­ள­ரிடம் வேண்­டுகோள் ஒன்று விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­போது புளி­யங்­குளம் துலான கிராம சேவை அதி­கா­ரியால் பரிந்துரைக்­கப்­பட்ட 10 ஏக்கர் காணி­யொன்று இப­லோ­கம பதில் நிரு­வாக அதி­காரி மூலம் குறித்த காணியை சிபா­ரிசு செய்து வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை அநு­ரா­த­புர முகா­மை­யா­ள­ருக்கு கடிதம் ஒன்று 2017.11.23 அன்று அனுப்­பப்­ப­டு­கி­றது. அக்­க­டி­தத்தில் பரிந்­து­ரைக்­கப்­பட்ட காணியின் எல்­லைகள் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அதன்­படி வடக்கே பூகொல்­லா­கம, தெற்கெ அலுத்­பு­ளி­யங்­குளம் மேற்­கேயும் பூகொல்­லா­கம கிழக்கே தொல்­பொருள் பாது­காப்பு வலயம் என்­பன எல்­லை­க­ளாக குறிக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் இவர்­களால் எல்­லை­யி­டப்­பட்­டுள்ள காணி தொல்­பொருள் பாது­காப்பு வல­யத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தல்ல என்­பது நன்கு தெளி­வா­கி­றது. அத்­துடன் அக்­க­டி­தத்தில் எந்த இடத்­தி­லேனும் காணிக்­கான அனு­ம­தியோ பொறுப்புச் சாட்­டலோ வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதில் எல்­லைகள் குறிக்­கப்­பட்டு கோரப்­பட்­டுள்ள கருத்­திட்­டத்­திற்கு உகந்த காணி என்ற பரிந்­துரை மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டுள்­ளது என்­பதும் நன்கு தெரி­ய­வ­ரு­கி­றது.

அத்­துடன் கிராம சேவை அதி­கா­ரியால் பரிந்­துரை வழங்­கப்­பட்­டுள்ள காணி தொடர்­பான கடி­தத்­துக்கு பிர­தேச செய­லா­ளரின் அடிக்­கு­றிப்பில் “இதற்­காக இணைப்புக் குழுவின் இணைத் தலை­வர்­களின் இணக்­கப்­பாட்­டுடன் இந்தப் பிரே­ர­ணையை வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு சமர்ப்­பிக்­கவும்” என்றே பிர­தேச செய­லாளர் சஜீதா பானு குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் குறித்த பரிந்­துரைக் கடி­தத்தை வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு அனுப்பும் போது பதில் நிரு­வாக அதி­காரி பிர­தேச செய­லா­ளரின் மேற்­படி குறிப்பின் மீது எத்­த­கைய கவ­னமும் செலுத்­தா­மலே அனுப்பியுள்ளார். அதனால் பிர­தேச செய­லாளர் குறிப்­பிட்­டி­ருந்­த­தற்­கி­ணங்க இணைப்புக் குழுவின் இணைத் தலை­வர்­களின் அங்­கீ­கா­ர­மின்­றியே குறித்த கடிதம் உரிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபையைச் சென்­ற­டை­கி­றது.

இது இவ்­வா­றி­ருக்­கையில் 2017 டிசம்பர் 19 ஆம் திகதி பொது மாகாண தின கூட்­டத்­தின்­போது பிர­தேச செய­லா­ள­ரினால் இலக்கம் 516 புளி­யங்­குளம் துலா­னயில் உள்ள, அதா­வது வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபைக்குச் சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்ள காணி தொடர்­பாக செயலாளர் கேள்வி எழுப்­பினார். அதன்­போது இக்­காணி விட­ய­மாக எவரும் எத்­த­கைய எதிர்ப்­பையும் வெளி­யி­ட­வில்லை. பின்னர் அப்­போது கமத்­தொழில் அமைச்­ச­ரா­க­வி­ருந்த துமிந்த திஸா­நா­யக்க மூலம் பிர­தேச செய­லா­ள­ருக்கு 2018 மார்ச் 12 ஆம் திகதி கடிதம் ஒன்று அனுப்­பப்­ப­டு­கி­றது. குறித்த காணி பகிர்ந்­த­ளிப்­பதில் பார­பட்சம் நிகழ்­வ­தா­கவும் அதனால்  உரிய பணியை இடை­நி­றுத்தும் படியும் அக்­க­டி­தத்தில் கேட்­கப்­பட்­டி­ருந்­தது. இக்­க­டிதம் பிர­தேச செய­ல­கத்தில் வந்­த­டைந்த திக­தி­யாக ஏப்ரல் 4ஆம் திகதி என்று குறிக்­கப்­பட்­டுள்­ளது. உடனே மறுநாள் ஏப்ரல் 5 ஆம் திகதி மேற்­படி விடயம் குறித்து பிர­தேச செய­லா­ளரால் வீட­மைப்பு அதி­கார சபை மாவட்ட முகா­மை­யா­ள­ருக்கு கடிதம் அனுப்­பப்­ப­டு­கி­றது. ஆனால் அக்­க­டிதம் கிடைக்­க­வில்­லை­யென்று இப்­போது தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த நிலை­யில்தான் வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபையால் பரிந்­து­ரைக்­கப்­பட்ட காணியில் 2018 இல் நிர்­மாணப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இவர்­க­ளது கைக­ளிலே எத்­த­கைய அனு­ம­தியும் வைத்­துக்­கொள்­ளாத நிலை­யிலே வேலைகள் முடுக்­கி­வி­டப்­பட்­டன. காணியின் எல்­லைகள் அள­வி­டவோ அல்­லது பொறுப்­பேற்­றலோ இன்­றியே காரி­யங்கள் நடந்­துள்­ளன. இது அரசின் கருத்­திட்டம் என்­பதால் பிர­தேச செய­லா­ளரும் இதனைத் தடுத்து நிறுத்­து­வதில் கரி­சனை காட்­ட­வில்லை.

அர­சியல்வாதியும் அடிக்கல் நடலும்

வீட­மைப்பு கருத்­திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்­காக  2018 ஏப்ரல் 9 ஆம் திகதி  அடிக்கல் நடும் வைபவம் நடை­பெற்­றது. ஐ.தே.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­திம மஹிந்­த­சோ­மவின் தலை­மையில் இந்த வைபவம் நடந்­தே­றி­யது. இதற்கு பிர­தேச செய­லா­ளரும் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். ஆனால் அவரால் அதில் கலந்து கொள்ள இய­லாது போனது. அடிக்கல் நடப்­பட்­ட­ கை­யோடு புல்­டோஸர் இயந்­தி­ரத்­துடன் காணி துப்­ப­ரவு பண்ணும் வேலைகள் துரி­த­மாக நடை­பெற்­றன. அத்­துடன் குறிக்­கப்­பட்ட எல்­லை­யையும் தாண்டி நட­வ­டிக்­கைகள் முன்­ன­கர்ந்­தன. இது தொல்­பொருள் நிலப்­ப­ரப்­பையும் ஊடு­ரு­வவே செய்­தது. அவ்­வி­டத்தில் அர­சி­யல்­வாதி சந்­திம மஹிந்­த­சோ­மவும் இருந்­துள்ளார். இச்­செ­யற்­பாட்டைக் கண்ட ஊர்வாசிகள் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்­ளனர். அர­சியல் வாதி இம்­மக்­களைத் திட்டி அச்­சு­றுத்­தி­ய­தாக பிர­தேசவாசிகள் கூறு­கின்­றனர்.குறித்த இடத்­திற்கு  நாம்  சென்று  அவ­தா­னித்­த­போது காணி  துப்­பு­ரவு பண்ணும் வேலைதான்  மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்­பதை உணர முடிந்­தது. அங்கு  தொல்­பொருள்  சின்­னங்­களை  சேதப்­ப­டுத்தும் எண்­ணத்­துடன்  வேலைகள்  நடை­பெற்­ற­தற்­கு­ரிய  சாத்­தி­யக்­கூ­றுகள்  எத­னையும்  எங்­களால் காண­மு­டி­ய­வில்லை.

தவ­றாகப் புரிந்துகொண்ட பரிந்­து­ரையும்  அனு­ம­தியும் 

வீட­மைப்பு  அபி­வி­ருத்தி  அதி­கார  சபையின்  தலை­வ­ரிடம்  இது­வி­ட­ய­மாக  வின­வி­ய­போது  பிர­தேச  செய­லா­ளரின்  அனு­ம­தி­யு­ட­னேதான் நாம் பணியை  ஆரம்­பித்தோம் என்று  அவர் கூறினார்.  அதற்­கான  அனு­மதிக்  கடி­தத்தை  நாம்  எடுத்துப்  பார்த்தோம்  அது பிர­தேச  செய­லா­ளரால்  வழங்­கப்­பட்ட  பரிந்­துரைக்  கடி­த­மா­கவே  உள்­ளதை  நாம் கண்டு கொண்டோம்.  இதுதான்  சிக்­க­லுக்குக்  காரணம் என்­ப­த­னையும்  உணர்ந்தோம். ‘பரிந்­துரை’ யை  ‘அனு­மதி’ என்று  புரிந்து கொண்­டதன்  விப­ரீதம்  நன்கு  புல­னா­கி­யது. பிர­தேச செய­லா­ளரின்  பரிந்­துரைக்  குறிப்­பி­லுள்ள  விட­யங்­களை  கருத்­திற்­கொள்­ளாது  வீட­மைப்பு  அபி­வி­ருத்தி  அதி­கார சபை  எத்­த­கைய  பொறுப்­பெ­டுப்­பு­மின்றி  காணியைப்  பெற்­றுக்­கொண்டு செயலில்  இறங்­கி­யதன்  விளை­வென்­ப­தையும் உண­ர­மு­டி­கி­றது. என்­றாலும்  அவர்கள்  பரிந்­து­ரையை  அனு­ம­தி­யென்றே  இன்னும் கருதிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

2001 ஆம் ஆண்டு நடந்­த­தென்ன  

2001 ஆம்  ஆண்டும்  இதே  போன்­ற­தொரு  நிகழ்வு  இதே இடத்தில்  இடம்­பெற்­றுள்­ளது. அப்­போது  இப­லோ­கம  பிர­தேச  செய­லா­ள­ராக  ஆர்.எம்.ஆர். சோம­ரத்ன என்­பவர்  பத­வியில்  இருந்­துள்ளார். அப்­போது  இதே காணியில் பாதை­யொன்று   அமைப்­ப­தற்­கான  திட்டம்  ஒன்று  மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்­தது. அது பாரிய  எல­கண்­டி­யி­லி­ருந்து நவ­விய ஆறு வரை­யான  நீண்ட பாதை­ய­மைப்­பாகும். இதன்  நிர்­மா­ணிப்­புப்­ப­ணிகள்  நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது  இப்­போது கண்­டெ­டுக்கப் பட்­டது போன்று  தொல்­பொருள்  சின்­னங்கள்  அங்கு  வெளி­யா­கின.  இதனால் இன்று  ஏற்­பட்­டது போன்ற  குழப்­ப­நி­லை­யொன்றும்  அப்­போது  உரு­வா­னது. உடனே  தொல்­லியல்  திணைக்­கள  அதி­கா­ரிகள் வந்து ஆராய்ந்த பின்னர் இங்கு குறிப்­பி­டத்­தக்க  தொல்­லியல்  பெறு­மதி வாய்ந்த எதுவும் இல்லை  என்று  உறு­திப்­ப­டுத்தி இவ்­விடம்  பேணப்­பட வேண்­டி­ய­தில்லை என்றும் கூறி  அவ்­வி­டத்தை  தொல்­லியல்  இட­மாக  ஏற்க மறுத்து விட்­டார்கள். ஆனால்  அர­சியல்  மாற்றம்  மற்றும் கார­ணி­களால்  பாதை  நிர்­மா­ணிப்பு  முயற்சி  கைவி­டப்­பட்­டது.  இன்­று­வ­ரையும்  தொல்­லியல்  திணைக்­களம்  இப்­ப­குதி   மீது விஷேட  கவனம் செலுத்­த­வில்லை.  இது தொல்­லியல்  முக்­கி­யத்­துவம்  வாய்ந்த  இட­மென்றால்  குறித்த  திணைக்­களம்  தகுந்த  பாது­காப்பு  வழங்­கி­யி­ருக்கும். குறைந்த  பட்சம்  பெயர்ப்­ப­லகை யொன்­றை­யா­வது  வைத்­தி­ருப்­பார்கள். இத்­த­கைய  எத­னையும்  நாம்  அங்கு கண்­டு­கொள்­ள­வு­மில்லை.  பிர­தேச  செய­லாளர்  ஒரு முஸ்லிம்  பெண் என்ற  இன, மத­வாத நோக்­கத்­து­டனே இதனைப் பிரச்­சினைப் படுத்­திக்­கொண்­டி­ருப்­பதே  உண்­மை­யாகும்.
அர­சியல் அசிங்கம்
இன, மத வாதத்­துடன்   அர­சியல்  இலாபம்  கரு­தி­யுமே  இதனை  ஊதிப் பெருப்­பித்துக் கொண்டு  போகி­றார்கள்.  தாமரை  மொட்டுக் கட்­சியின்  இரண்டு  அர­சியல்வாதி­களின்  கரங்கள்  இதன் பின்னே  உள்­ளதைக்  காண­மு­டி­கி­றது.  ஒருவர்  பிர­தேச சபையின்   தவி­சாளர்  நிஹால்,  மற்­றவர்  உப தவி­சாளர்  ஹேமந்த  இவர்கள்  இரு­வ­ருமே  ஆரம்­பத்தில்  இன­வா­தத்­துக்கு  துணை­போகும்   ஊட­க­வி­ய­லாளர்   இரு­வ­ரையும் அழைத்து வந்து  பிர­சா­ரத்தை  முன்­னெ­டுக்கச்  செய்­தனர்.  இவர்கள்  முஸ்லிம்  பிர­தேச  செய­லாளர் மீது  குற்­றங்­களைச்  சுமத்தி  மீண்­டு­மொரு  இனக்­க­­ல­வ­ரத்தைத்  தூண்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். மேலும்  இந்த இடத்தைக்  கண்­கா­ணிக்க  வந்து  விமர்­ச­னங்­களை  முன்­வைத்­த­வர்கள்  யார்-?   என்று உற்று  நோக்­கினால்  இதனைப் பிரச்­சி­னைப்­ப­டுத்­து­வோரின்  தேவை  என்ன என்­பது  நன்கு  துலாம்­ப­ர­மா­கி­றது. வந்­த­வர்­களில்  முத­லா­மவர்  ஞான­சார தேரர். இரண்­டா­மவர் இத்­தே­கந்த  சத்­தா­திஸ்ஸ  தேரர் இவர்­களை  வர­வ­ழைத்தது, முன்னர் சுட்­டிக்­காட்­டிய இரண்டு அர­சியல்வாதி­களும்  இன­வாத  ஊட­க­மொன்றின்  ஊட­க­வி­ய­லா­ள­ரு­மா­வார்கள். இவர்கள்  தொடர்ந்தும் தம்  முயற்­சியை  முன்­னெ­டுத்­துக்­கொண்டே  இருக்­கி­றார்கள்.

இவர்­க­ளது  மற்­றொரு  தந்­தி­ரோ­பா­ய­மாக  பிர­தேச  செய­லா­ள­ருக்கு  இக்­க­ருத்­திட்­டத்தை  தடை­செய்­யும்­படி  அழுத்தம் கொடுத்­துள்­ளனர்.  இது இவர்­க­ளது  நரித்­தந்­தி­ர­மாகும்.  பிர­தேச  செய­லாளர்  கருத்­திட்­டத்தை  இடை  நிறுத்­தி­யதன்   விளை­வாக  அவர்   கருத்­திட்­டத்தை  முன்­னெ­டுக்கும்  அர­சி­யல்­வா­தி­யான  சந்­திம மஹிந்த சோமாவின்  எரிச்­ச­லுக்­குள்­ளானார். இரு புறத்­தாலும்  இவ­ருக்கு  இடி  விழுந்­ததில் தந்­திர அர­சியல்  இன­வா­தி­க­ளுக்கு திருப்­பிதான்.  அர­சியல்  போட்டி  பொறா­மையும் இதில்  புகுந்து  விளை­யாடிக்  கொண்­டி­ருக்­கி­றது.

 சஜி­தா­பா­னுவும் முஸ்லிம் குடி­யேற்­றமும்  

இப­லோ­கம  பிர­தேச  செய­லாளர்  ஒரு முஸ்லிம் பெண் என்­பதால்  அர­சியல் வாதி­க­ளுக்­கு­கி­டை­யே­யான  குத்து வெட்­டுக்­க­ளோடு  இன­வா­தத்­தீயும்  சேர்ந்து  இவர்  பலிக்­க­டா­வாக்­கப்­பட்­டுள்ளார். இதற்­காக இவர்  முஸ்லிம்  என்ற நிலையில் சிங்­கள, பெளத்த உரிமைச்  சின்­னங்­களை அழித்து  வரு­கிறார் என்ற கதை­யையும்  இன­வா­திகள்  பரப்பி வரு­கின்­றனர்.  இப்­படி  ஒரு புறத்தில்  தீ மூட்ட  மறு­பு­றத்தில் நிர்­மா­ணிக்­கப்­படும் புதிய  குடி­யேற்­றத்­திட்­டத்தில் முஸ்லிம் குடி­யேற்றம்  ஒன்றை  ஏற்­ப­டுத்­தவே இவர் முயற்­சிக்­கிறார் என்ற மற்­றோரு  நெருப்பையும்  மூட்டி  வரு­கின்­றனர்.  இந்த எந்தக் கூற்­றி­லும்­கூட  உண்மை யில்லை என்­பது  தெளிவு. ஏனெனில்  வீட­மைப்பு  அபி­வி­ருத்தி  அதி­கார  சபை  நடாத்தும் நேர்­முகப் பரீட்­சையின்  மூலமே  வீடுகள் வழங்க பய­னா­ளிகள்  தேர்­தெ­டுக்­கப்­படுகின்­றனர்.  இப் பரீட்­சை­யின்­போது  பிர­தேச  செய­லா­ளரின்  எத்­த­கைய  தலையீடோ  பங்­க­ளிப்போ  இருக்கப் போவ­தில்லை.
அத்­துடன்  வீடுகள் கைய­ளிக்­க­வுள்­ளோ­ரின்­பெயர்  பட்­டி­யலை  அவ­தா­னிப்­பதன்  மூலம்  இக்­குற்­ற­சாட்­டிலும் உண்­மை­யில்லை என்­பது  மேலும்  ஊர்­ஜி­த­மா­கி­றது.  வீடுகள்  கைய­ளிக்­க­வுள்ள   48 பேரில்  இரண்டே இரண்டு  பேர்தான்  முஸ்­லிம்கள்  ஏ.ஏ.எம்.ரஜிக், எம்.ஹஸன்  அல்­லா­பிச்சே  என்ற  இரு முஸ்­லிம்­க­ளுக்கு  வீடுகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. ஏனைய  46 பேரும்  சிங்­க­ள­வர்­க­ளாவர்.

ஊர் மக்­களும் பிர­தேச தேரரும்

 பிர­தேச  செய­லா­ளரின்  செயற்­பா­டுகள், பண்­புகள் குறித்து  அப்­பி­ர­தேச  மக்­களே நன்­க­றிவர். அதனால்  அம்­மக்­களை  அணுகி  இது விட­ய­மாக  வின­வினோம்.  அவ­ரது நேர்­மை­யான  பணி குறித்தே  அனை­வரும் விதந்­து­ரைத்­தனர். அவர் இன, மத பேதத்­துக்­கப்பால்  நின்று  கரு­ம­மாற்­று­பவர்  என்றும் அவ­ரது  முஸ்லிம் சமூ­கத்­துக்கு விசேட  சலு­கைகள் கூட  வழங்­கு­ப­வ­ரல்லர்  என்­றுமே  எல்­லோரும்  கருத்­து­களை  முன்­வைத்­தனர். அங்கு  உரு­வா­கி­யுள்ள  அச­காய  நிலை  கார­ண­மாக  இவர்­களில்  எவரும்  ஊட­கங்­க­ளுக்கு  வந்து தம்மை  இனம்­காட்டி பகி­ரங்­க­மாகக்  கருத்து  வெளி­யிடத்  தயக்கம் காட்­டு­கின்­றனர். ஆனால்   கலா­க­ர­டேவ விகா­ரையின்  தம்­ம­கீர்த்தி தேரர், மேற்­படி பிர­தேச செய­லா­ளரின்  பண்­புகள் குறித்து  நற்­சான்­று­ரை­யொன்றை  இப­லோ­கம  விவ­கா­ரத்தை  கிண்டிக் கிளறிக் கொண்­டி­ருக்கும் இரு  ஊட­கங்­க­ளுக்கும் வழங்கியுள்ளார். ஆனால்  அவை  தேரரின் கூற்றை  மூடி மறைத்து விட்டன.  வெளியிடவேயில்லை.  ஆனாலும்  நாம் விடவில்லை. தம்மகீர்த்தி  தேரரைத் தேடிச்  சென்றோம்.  துரதிஷ்டவசமாக  அவர் நோய்வாய்ப்பட்டு  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். எமது முயற்சி கைகூடவில்லை.

 தாமரை  மொட்டுக்கட்சியின்  அரசியல்வாதிகளோ காணி விவகாரத்தை  வைத்துக்கொண்டு  அடிப்படைவாதிகளை  உசுப்பேற்றும்  தம்  நாச வேலையைத்தொடர்ந்து கொண்டே  வருகின்றனர். பொதுபல  சேனாவின்  ஞானசாராக்கள், இத்தேகந்த  சத்தாதிஸ்ஸாக்கள் ஊடக  ஒத்தாசையாளர்கள் தம் சுயநல  அடிப்படைவாத  நடவடிக்கைகளுக்காக  இச்சம்பவத்துக்கு  மேலும்  எண்ணெய்   வார்த்துக் கொண்டிருகிறார்கள். இதனை  மற்றொரு  கண்டி– திகனயாக  பற்றியெரியவே  வழிவகுத்துக்  கொண்டிருக்கிறார்கள்.  சந்திம மஹிந்த சோமாவின் நடவடிக்கையைக்  கண்டு கொள்ளாது சஜீதா பானுவை தூக்கிப் பிடித்துக்கொண்டு  களத்தில்  குதித்துக் கொண்டிருப்பது தம்  நாசகாரத்தை அரங்கேற்றுவதற்கேயாகும்.
-Vidivelli

No comments

Powered by Blogger.