Header Ads



சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின், நீண்டநாள் தேவைகளில் ஒன்று பூர்த்தி

-மு.இ.உமர் அலி- 

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு 27 லட்சம் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கூடத்திற்கான மேசை (Operating Theater- Table) ஒன்றினை பிரதியமைச்சர் பைசால் காசீம்  வழங்கியுள்ளார். இந்த Operating Theater- Table ஆனது  இவ்வைத்தியசாலையின் நீண்ட கால தேவையாக இருந்தது.

வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் உட்பட மற்றும் சம்மாந்துறை சூறா சபையினர் பிரதி அமைச்சர் அவர்களிடம் இவ்வுபகரணத்தினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த கோரிக்கையை செவிமடுத்த பிரதியமைச்சர் அமைச்சு அதிகாரிகளுக்கு உடனடியாக வழங்கிய பணிப்புரைகளுக்கு அமைய இன்று இவ்வுபகரணம் கிடைக்கப்பற்றுள்ளது.

        அண்மையில் இவ்வைத்தியசாலைக்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் பயன்படுத்தக்கூடியதும் மின்சாரத்தில் இயங்கக்கூடியதுமான  தன்னியக்க கட்டில்கள் ஐந்து பிரதியமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டுளன.ஒவ்வொரு கட்டிலும் தலா ஆறுலட்சம் பெறுமதியானவையாகும்.

          அது மட்டுமன்றி முழு வைத்தியசாலையின் தேவையினையும் நிறைவு செய்யக்கூடிய 60 000 சதுர அடி பரப்புள்ள நான்கு மாடிகளைக்கொண்ட கட்டிடத்தொகுதியினை அமைப்பதற்குரிய சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.வெளிநாட்டு நிதியுதவியுடன் கட்டப்பட இருக்கின்ற இக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாடும் நிகழ்வு இன்சா அல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாத இறுதிப்பகுதியில் நடைபெற வாய்ப்புண்டு.

1 comment:

  1. ஐயோ .....ஐயோ, சம்மாந்துறையில் இல்லாத தச்சன்மாரா???? இத கொஞ்ஞம் ஜும்மாவுல சொல்லியிருந்தா ஒன்றா இரண்டா நூறு மேச வந்திருக்குமேப்பா.

    ReplyDelete

Powered by Blogger.