Header Ads



இப்தாரில் அதீதியாக கோட்டாபய - 3500 பேருக்கு அழைப்பு

மில்பர் கபூர் மன்ற இப்தார் நிகழ்வு 
​ 
பேருவளை மில்பர் கபூர் மன்றம் 3வது வருடமாக ஒழுங்கு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 5.00 மணிக்கு மக்ெகான பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 


மன்றத் தலைவரும் பேருவளை நகர சபை முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் தலைமையில் நடைபெறவுள்ள இவ் இப்தார் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கலந்து சிறப்பிப்பார். 


இந்நிகழ்வில் அதிதிகளாக களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம , ரோஹித அபேகுணவர்தன , விதுர விக்கிரமநாயக்க , பியல் நிசாந்த , முன்னாள் நகர பிதா மர்ஜான் பளீல் உட்பட நகர , பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொள்வர். 
சுமார் 3500 பேர் கலந்து கொள்ள ஏற்பாடாகியுள்ள இந்நிகழ்வில் உலமாக்கள் , புத்திஜீவிகள் , பாடசாலை அதிபர்கள் உட்பட பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

5 comments:

  1. வடித்தெடுக்கப்பட்ட காபிர்களுடன் ஏன் நயவஞ்சகமாக இந்த சோனக சமூகம் நடந்துகொள்கின்றது என்பதை அவதானிக்க மிகவும் கவலையாக இருக்கின்றது. இந்த சோனக சமூகம் அல்குர்ஆனில் சூரா பகராவின் ஆரம்ப 8 12 வரையான வசனங்களை மீண்டும் வாசித்து புத்துயிர் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றேன்.

    ReplyDelete
  2. how can get RAHMATH for this IFTHAR FUNCTION.........

    ReplyDelete
  3. if you have a brain please use it

    ReplyDelete
  4. Re: PTS

    சூரா அல் பகரா:

    2:8. இன்னும் மனிதர்களில் “நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்” என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.

    2:9. (இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்; ஆனால் அவர்கள் (உண்மையில்) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை; எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.

    2:10. அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது; அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.

    2:11. “பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் “நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்” என்று அவர்கள் சொல்கிறார்கள்.

    2:12. நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.

    www.tamililquran.com

    இதில் சம்பந்தப்படும் முஸ்லிம்கள் சக முஸ்லிம் சகோதரர்களின் நியாயமான  உணர்வுகளை மதிக்குமாறும் முஸ்லிம்களிடையே பிரிவினையை வளர்க்க இடம் அளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete

Powered by Blogger.