Header Ads



மகிந்தவின் தலைமைத்துவத்தை ஏற்றுச்செயற்பட 16 Mp க்கள் இணக்கம்


மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுச் செயற்படுவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.

கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று மாலை கொழும்பில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள தாம் இணங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கிறார். கூட்டு எதிரணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்தவர்கள் தான்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என்ற வகையில், கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இருந்தாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இணைந்து செயற்படுவோம்.

இது ஒன்றும் புதிய விடயம் அல்ல. சந்திரிகா குமாரதுங்க அதிபராக இருந்த போது, மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். இரண்டு பேருமே சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் தான்” என்றும் அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. முல் இல்லா நாக்கு எப்படியும் பேசும் இதை விட ஒரு பல படி மேல் இவர்கள் பேசுவார்கள் என்னில் இவர்கள் பழுத்த (புழுத்த ) அரசியல் வாதிகள் மலேசிய நாட்டில் தற்போது 25 ஆக இருந்த அமைச்சரவை 13 ஆக குறைத்து மற்றும் இவர்களின் சம்பளத்தை 10% வீதத்தால் குறைத்தும் உள்ளனர் காரணம் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற உதவும் என்று ஆனால் எம் நாட்டில் நடப்பதோ ஒஹ்

    ReplyDelete

Powered by Blogger.