Header Ads



இம்தியாஸை செயலாளராக்க சஜித் பிடிவாதம், நழுவினார் ரணில்


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளராக, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மார்க்காரை நியமிக்குமாறு, அமைச்சர் சஜித் பிரேமதாஸா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.

சகல சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர், கட்சியில் மூத்தவர் எனவும் இதன்போது சஜித் பிரேமதாஸா ரணிலிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேவைப்படுமிடத்து இதற்காக தேர்தலை நடத்துமாறும்  சஜித் வலியுறுத்தியுள்ளார். 

எனினும் இதன்போது குறிக்கிட்டுள்ள ரணில், ஐ.தே.க. யின் யாப்பின்படி தலைவருக்குள்ள அதிகாரத்தின் கீழ் ஐ.தே.க. செயலாளரை தலைவரே நியமிக்க முடியுமெனக்கூறி நழுவியுள்ளார்.

அதேவேளை ஐ.தே.க.யில் தற்போதுள்ள சாபநிலைக்கு, கட்சியின் யாப்பே காரணமெனவும், யாப்பின்படி தலைவருக்கு  அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதும், செயற்குழுவில் கட்சி தலைவருக்கு சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. தனி மனிதனுக்கோ அன்றி நிறுவனங்களுக்கோ அவ்வவற்றின் பெயர்களின் பொருள்கள் அவ்வவற்றில் ஆதிக்கம் அதிகம் செலுத்த வல்லன.

    அந்த வகையில் ஐக்கிய தேசியக் கட்சி தேச மக்களை ஐக்கியப்படுத்தி அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கான சகல ஆற்றலையும்  கொண்ட கட்சியே.

    ஆனால், அதனை நிர்வகிப்போர் அவ்வாற்றலுக்கு நிகரான ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை.

    இனவாத ஆளுமைகள் அற்ற கட்சியாக அது என்று மீள் எழுமோ அன்றே இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் (IBM) போன்ற பல்துறைத் திறமைசாலிகளின்  சேவையைப் பெற்று முன்பு போல  சொந்தக் காலில் நிற்க அக்கட்சி தகுதியடையும்.

    IBM எப்போது அக்கட்சிப் பதவிகளைத்   துறந்து வெளியே வந்தாரோ அப்போது முதல் நாம் அவதானித்து வந்த அக்கட்சியின்  அடுக்கடுக்கான தோல்விகள் இதனையே   உணர்த்துகின்றன.

    மறுசீர் அமைப்பு என்பது எல்லாம் உள்ளத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும். 'ஐக்கியம்' 'தேசியம்' என்ற வார்த்தைகளை அதிகமதிகம் தியானம் செய்ய வேண்டும் ஐ.தே. கட்சியினர்.

    ReplyDelete
  2. UNP is not a Ranil personal property. JR made a huge blunder introduced this unpopular man, even Sinhalese don't want him.

    Ranil is destroying the UNP and that is the current course for the current problems in the Island.

    ReplyDelete

Powered by Blogger.