Header Ads



கண்டி வன்முறைகள், பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் கைதாவார்

கண்டிப் பிர­தே­சத்தில் திகன, தெல்­தெ­னிய மற்றும் அயல் பிர­தே­சங்­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் விரைவில் மேற்­கொள்­ளப்­படும். இதற்­காக அனைத்து விசா­ர­ணை­க­ளையும் எதிர்­வரும் 14 ஆம் திக­திக்கு முன்பு பூர்த்தி செய்­யு­மாறு பொலிஸ் மா அதிபர் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார் என சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச மருத்­துவ அமைச்சர் தெரி­வித்தார்.

தகவல் திணைக்­க­ளத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பதி­ல­ளிக்­கையில்;
கண்டிப் பிர­தேச வன்­செ­யல்கள் தொடர்பில் ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட வாக்­கு­மூ­லங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன. ஒவ்வொரு பிரிவின் வாக்­கு­மூ­லங்கள் ஏனைய பிரி­வு­க­ளு­டனும் தொடர்­பு­பட்­டுள்­ளன. பொலிஸ் மா அதிபர் விசா­ர­ணை­களை உடன் பூர்த்தி செய்­யு­மாறு உத்­த­ர­விட்­டுள்ளார். விசா­ர­ணைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினரின் கைது தொடர்பில் பொலிஸ் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

ARA.Fareel

1 comment:

  1. இந்த பல்லவியத்தான் கடந்த கலவரம் முதல் கூறிக் கொண்டு இருக்கின்றார்களே தவிர
    கைது செய்வதாக இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.