Header Ads



சவூதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான பெண் - சடலம் இலங்கை வந்தது

சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த நிலையில்,க்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்று (17) இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த பெண் பணியாற்றிய வீட்டிலிருந்த,  மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞனே துப்பாக்கியால் சுட்டு இவரைக் கொலை செய்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில், காலி- வதுரப பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய, பிரியந்தா ஜயசேகர என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்று  (17) காலை 6.15 மணியளவில் விமானத்தின் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் சட்டபூர்வமாக பதிவு செய்து கொண்டு வெளிநாடு சென்றுள்ளாரெனவும், தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் சவூதி தூதரகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.