Header Ads



விடுமுறை, உனக்கா..? அல்லது மார்க்கத்திற்கா..??

-M.F.M. பஹாத் அப்பாஸி-

மனிதனின் வாழ்க்கை பாதையில் கல்வி, தொழில், பொதுச் சேவை போன்ற பலவற்றிலும் கால்பதிந்து நடக்கிற பொழுது விடுமுறை, ஓய்வு அத்தியாவசியமாகும். அந்த வகையில் இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்குமான விடுமுறையாக ஏப்ரல் விடுமுறை காணப்பட்டு வருகிறது. இக்காலத்தை ஒவ்வொரு சமூக வகுப்பினரும் அவரவர்களுக்கு ஏற்ற வகையில் சுற்றுலா செல்லுதல், குடும்பமாக உறவாடல், விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளைக் கொண்டு மகிழ்வுறல் போன்றவாறு பயன்படுத்துகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம்களாகிய எமக்கு எவ்வகையான சமூக நிறுவனங்களிலிருந்து விடுமுறையை பெற்றாலும், சமயம் மற்றும் மார்க்கம் என்ற நிறுவனத்திற்கு விடுமுறை வழங்கும் உரிமை நம் யாருக்கும் இல்லை என்பதை மறந்து விடக்கூடாது. தமது பிறப்பு முதல் இறப்பு வரை தூய இஸ்லாத்தோடு  உறவாடிக் கொண்டு வாழ்வதன் மூலமே ஈருலகிலும் வெற்றி பெறலாம் . (இன்ஷா அல்லாஹ்) 

அந்தவகையில் சுற்றுலா, கலைப்பாறல், மகிழ்விக்கும் நிகழ்வுகள் போன்றவற்றை பொதிந்த இக்காலத்தில் மார்க்க அம்சங்களை விட்டும் தூரமாகுவதன் ஊடாக, எவ்வழிகளில் எம்மால் மார்க்கத்திற்கு விடுமுறை வழங்கப்படுகின்றன என்பவற்றை சுருக்கமாக பின்வருமாறு அடையாளப்படுத்துகிறேன். 

அல்லாஹ்வைப் பற்றி சிந்திப்பது

நம்மை படைத்த இறைவனை சிந்திக்க வழிமுறைகளை கொண்ட காலம் இது. ஏனெனில் சுற்றுலாக்களின் போது பல புது இடங்கள், படைப்புக்கள் மற்றும் ரப்பின் அத்தாட்சிகளை பார்த்து , சிந்திப்பதற்கு வாய்ப்புக்கிடைக்கிறது. அப்பொழுதுகளில் தமது சிந்தனைகளை கிளரச்செய்து ஈமானை புதுப்பித்து மறுமலர்ச்சி கொண்ட வாழ்க்கையாக தமது வாழ்கையை மாற்றுவதற்கு வழிசெய்தல் அவசியம். ஆயினும் இறைவனை முற்றிலும் மறந்த சிந்தையுடனும், உலகத்தின் சுவன்டிகளுக்குள் சிக்கித் தவிக்கும் நிலையே நம்மவர்களில் பலரிடத்தில் காணப்படுகிறது என்பது கவலைக்குரிய அம்சமாகும்.

இஸ்லாத்திற்கும் இறை நிராகரிப்பிற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகை.

தொழுகையை நிறைவேற்றுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் தலையாய கடமையாகும். முஸ்லிமான வயது வந்த எவருக்கும் வேண்டுமென தொழுகையை விட முடியாத. உறங்கிய வடிவில் கட்டிலில் தவிக்கும் நோயாளியாக இருப்பின் அவருக்கு முடிந்த வகையில் தொழுவது கடமையாகும். இவ்வாறு நமது செயற்பாடுகளுடன் ஒட்டி இருக்க வேண்டிய வணக்கத்திற்கு பலரால் இக்காலத்தில் விடுமுறை கொடுக்கப்படுகின்றது மற்றுமொரு முக்கிய அம்சமாகும். அத்துடன் பயணங்களில் வழிகாட்டப்பட்டுள்ள சேர்த்து , சுருக்கி தொழுதல் போன்றவற்றை பற்றிய தெளிவைப் பெற்று பின்பற்ற முயற்சிக்க வேண்டும். 

“எவர் ஒருவர்  இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறாரோ, அவர் அதைச் சார்ந்தவராவார்”

நாம் முஸ்லிம்கள். நமக்கென இறையியல் கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் மற்றும் பண்பாட்டம்சங்கள் என தனித்துவத்தை பாதுகாக்கும் பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை நாம் பின்பற்றுவதன் மூலமே இஸ்லாமிய அடையாளத்தை வெளிப்படுத்த முடிகிறது.  இறைக்கோட்பாடி, வணக்க வழிபாடுகளில் நாம் பிரிந்து வாழ்வதைப் போல பண்பாட்டம்சங்களிலும் ஒன்றினையாமல் இருப்பது கட்டாயக் கடமையாகும். அந்நிய சமயத்தவர்களோடு மனிதத்துவம் பேணி, அவர்களை மதித்து, அவர்களின் செயற்பாடுகளையும், உணர்வுகளையும் ஏற்று மதிப்பளிப்பதே எம்மீது கடமை என்பதை விடுத்து அவர்களின் சமய அம்சங்களை நாமும் செய்வது, செய்யத்தூண்டுவது இஸ்லாமிய தனித்துவ அடையாளத்தை அழிப்பதற்கு சமனாகும் என்பதை உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இதன் தோரனையில் முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாசாரத்தை குறித்துக் காட்ட வேண்டும். நம் பெண் உறவுகளில் பலர் அபாயாக்கள் என்று கூறிக் கொண்டு அந்நியவர்களைப் போல இருக்கமாகவும், உடலின் உற்பகுதிகள் வெளியில்  தெரியும் வகையில் மெல்லியதாகவும் ஆடை அணிந்து திரிவதைப் பார்க்கிறோம். இது நகரத்திற்கு அழைத்துச்செல்லும் என நபியவர்கள் பல ஹதீஸ்களிள் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு தமது சுதந்திரம், தமது உரிமை என நாத்திக வாதங்களோடும், சிந்தனைகளோடும் வாழ்கிற சகோதரிகளைப் பார்க்கிறோம். இவ்வரிகளை வாசிப்பவர்கள் கொஞ்சம் நேரமெடுத்து இது பற்றிய ஆழமான அறிவைப் பெற்று புது மாற்றத்தை கொண்டுவற நிச்சயமாக முயற்சிப்பார்கள் என நம்புகிறேன். 

மேற்கூறப்பட்ட மூன்றில் எதிலாவது இன்னொரு சமுதாயத்தவருக்கு ஒப்பாகிறார்களோ, அவர்களைச் சார்ந்தவர்களாக மாறுவோம் என்பதை மறந்து விடாது நடப்போம். இன நல்லிணக்கம் , சமூக நல்லுறவு போன்ற எதுவாக இருப்பின் ஈமானிய வரம்புகளுக்குள் நின்று செயற்பட முயற்சிக்க வேண்டும். 

“இசையால் இளைப்பாறும் நம் சமூகம்”

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப் பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்து விட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான். (நூல்: புகாரி 5590)

மேற்குறிப்பிடப்பட்ட இந்த ஹதீஸில் விபச்சாரம் , மதுபானம் , பட்டாடை அணிவது போன்ற பாவங்களின் சம தரத்திலேயே இசைக்கருவிகளையும் நபிகளார் குறிப்பிடுகிறார்கள்.தமது பிள்ளைகளை விபச்சார விடுதிகளுக்கு அனுப்புங்கள் அல்லது மதுபானம் அருந்தக் கொடுங்கள் என யாராவது சொன்னால், அவற்றினை செய்வோமா? ஒருபோதும் செய்யமாட்டோம். அப்படியென்றால் அதே சமதரத்தில் இருக்கிற மட்டகரமான பாவமே இசை கேட்டல், இசை நிகழ்ச்சிகளை நடத்தல், ஊக்குவித்தல் , அதற்காக தம் ஓய்வு நேரங்களை அர்ப்பணித்தல் ஆகும். இவற்றில் நம்மவர்கள் இக்காலத்தில் சர்வ சாதாரணமாக ஈடுபடுவதை காண்கிறோம். 

அத்துடன் சுற்றுலா பயணங்களின் போது வாகனங்களிலும், சுற்றுலா தளங்களில் இசைக்கச்சேரிகளிலும் நம் இஸ்லாமிய அன்பர்கள் இளைப்பாறுகிற நிலமைகளை கண்ணீருடன் காண்கின்றோம். இறைநினைவை விட்டும் தூரப்படுத்தும் இந்நச்சு சிந்தனையிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். 

போதைவஸ்துக்களோடு உறவாடும் இளம் சமூகம்

அனைத்து விதமான சமூகப்பிரச்சினைகளுக்கும் தாயாக இருப்பது  மதுபானம். சமகாலமக பல கலவரங்கள் தோற்றம் பெற்றதற்கு காரணமாக அமைந்ததும் இது என்பதை கண்ணூடாக அவதானித்தோம். 

விடுமுறைகளில் சுற்றுலாக்கள், விழாக்கள் என்று வரும்பொழுது மகிழ்ச்சி எனும் தோரணையில் இளம் சமுதாயம் போதைவஸ்த்துப் பாவனைக்கு அடிமையாகி, ஏனையவர்களை பரிகாசம் செய்து தொந்தரவு செய்கிற செயல்பாடுகளையெல்லாம் நாம் கேட்டுள்ளோம். இதனுடனான பாவனை தனிநபருக்குள் பாரிய விளைவை ஏற்படுத்துவது போல, சமூகத்தையும் அபாயகரமான பாலத்திற்குள் தள்ளி விடும் என்பதை மறந்து விடக்கூடாது. 

இவ்வாறு பல விடயங்களை பட்டியலிட்டு தொடரலாம். இதன் படி விடுமுறைகள் என வரும்போது இஸ்லாத்தின் ஏவல்களை செய்யாது, விலகல்களிலிருந்து தம்மை விடுத்துக் கொள்ளாது செயற்பட்டு மொத்த இஸ்லாமிய மார்க்கத்திற்கே விடுமுறை கொடுப்பதை உய்த்தறிய முடிகிறது. 

ஆகவே அன்பார்ந்த உறவுகளே..! வாலிபர்களே..! இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் என்பவை மறுமை, மன்னறை வெற்றிக்குரிய வழி மாத்திரமல்ல, மாறாக உலக அமைதி, சமாதானம், தனிமனித மற்றும் குடும்ப உறவுகளின் நிம்மதி, மகிழ்ச்சி போன்ற பலவற்றின் சீரான தன்மைக்கும் பயண்படுபவை என்பதை பூரணமாக விளங்கி, உண்மையான நம்பிக்கையுடன் செயற்றபடுத்தி ஈருலகிலும் வெற்றி பெருவோமாக..!ஆமீன்.

1 comment:

  1. எப்போதும் பெண்களை எதோ ஒருவகையில் மேய்ப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.பொதுவாக தீர்மானம் முடிக்காத பெண்கள் பெற்றோரின் பொறுப்பிலும் திருமணன் முடித்த பெண்கள் கணவனின் பொறுப்பிலும் இவ்வாறு ஒரு பெண் ஏதாவது ஒரு பொறுப்புள்ள ஆணின் தலைமையில் இருக்கிறாள் என்பது உண்மை.இந்த பொறுப்புள்ள ஆண் தனது பொறுப்பின் கீழ் உள்ள பெண்ணை இஸ்லாம் கூறும் விதத்தில் கண்கானித்தால் இந்தப் பிரச்சினை வராது.இவ்வாறான இழிவான போக்கை அதிகமாக பாமர பெண்களிடத்தில் குறைவாகவே இருக்கிறது ஆனால் படித்த பெண்கள் என்று சொல்லும் சில பெண்கள் நாகரீகம் பெண்ணின் உரிமை காலத்து ஏற்ற நாகரிகத்தோடு உடை நடை இருக்க வேண்டும் என்று அநாகரிகத்தை பின்பற்றும் முறையால் ஒட்டு மொத்த முஸ்லிம் பெண்களையும் மற்றவர்கள் வசை பாடும் நிலை ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் பொறுப்பு பெற்றோர் அல்லது கணவன் அல்லது சகோதரர்கள்.இந்தப்போருப்புள்ளவர்கள் தன்னிடத்திலும் இஸ்லாம் இல்லாமல் அந்நிய கலாச்சாரத்தை பேணுபவராக இருந்தால் யார் வழி நடத்துவது?இப்பொறுப்பில் இருப்பவர்கள் வேறு பெண்கள் அநாகரிகமாக உடுத்திருக்கும் அசிங்கத்தை ரசிக்கக்கூடியவனாக இருந்தால் இவன் எவ்வாறு தனது பொறுப்பில் உள்ளவர்களை கட்டுப்படுத்த முடியும்?பொதுவாக எல்லா வகையான ஆண்களும் உசாராக இருக்க வேண்டும்.பெண் படித்தால் அது அவளின் வாழ்க்கைக்கு தேவையானது ஆனால் சமுதாயத்தை இழிவு படுத்தி தானும் கேட்டு தன குடும்பத்தையும் இழிவுபடுத்துவதற்கு இல்லை என்பதை ஒவ்வொரு பெண்ணும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.