Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை, சர்வதேசத்திற்கு கொண்டுசெல்பவர்கள் குறித்து விசாரணை

இலங்கையில் இடம்பெற்றுவரும் முஸ்லிம் மக்களுக்கெதிரான வன்முறைகள் குறித்தான உண்மை நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும் முக்கியமான முஸ்லிம் அரசியல் தலைவர்களை அரச புலனாய்வுத்துறை கண்காணிக்க ஆரம்பித்துள்ளதாக மிக நம்பகரமாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கடந்த காலங்களில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட சர்வதேச மனித உரிமைகளை காக்கும் அமைப்புக்கள் முழுமையான விபரங்களை அறிந்து வைத்திருப்பதால் அது விடையத்தில் அரசு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக நம்பப்படுகின்றது.

இப்படியான தகவல்கள் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊடாகவே வெளியில் செல்வதாகக் கருதும் அரசு அதனைக் கண்காணிக்கும் வகையில் செயற்படுமாறு தேசிய புலனாய்வுத்துறையை பணித்திருப்பதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அரசால் சந்தேகிக்கப்படும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சந்திக்கும் முக்கியஸ்தர்கள், அவர்களுடன் நெருங்கி செயற்படும் நாடுகள், அவர்களுக்கு நிதியுதவிகள் கிடைக்கும் மூலங்கள் என்பன இதன்படி கண்காணிக்கப்படுவதாக அறியமுடிந்தது என்றுள்ளது.

4 comments:

  1. வன்முறைக்கு தீர்வு தராத பொட்டை அரசாங்கமும் அரசியல் வாதிகளும் தீர்வைப்பெற ஐநா செல்கையில் கண்காணிக்க என்ன அருகதை இருக்கின்றது. ஆகவே அரசே இதை திட்டமிட்டு செய்கிறது என்பது தெளிவு. அதில் ஒட்டியிருக்கும் பொட்டை முஸ்லீம் பெயர்தாங்கி மக்கள் பிரதிநிதிகளும் வெளியேறி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கி அரசை மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  2. வன்முறைக்கு தீர்வு தராத பொட்டை அரசாங்கமும் அரசியல் வாதிகளும் தீர்வைப்பெற ஐநா செல்கையில் கண்காணிக்க என்ன அருகதை இருக்கின்றது. ஆகவே அரசே இதை திட்டமிட்டு செய்கிறது என்பது தெளிவு. அதில் ஒட்டியிருக்கும் பொட்டை முஸ்லீம் பெயர்தாங்கி மக்கள் பிரதிநிதிகளும் வெளியேறி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கி அரசை மாற்ற வேண்டும்.

    ReplyDelete
  3. இதுவரைக்கும் நடந்தது வெறும் ட்ரைலர் தான் தம்பி இனிதான் எப்படி சர்வேதேசத்துக்கு கொண்டு போகனும்னு ஐடியாவே கிடைச்சிருக்கு. முஸ்லீம் நாடுகளிடம் ஓடிப்போய் நாங்க காலைப்புடிக்க மாட்டோம். நாங்கள் இன்னும் ஒற்றுமைப்படவில்லை ஒற்றுமை. பட்டால் இப்படி நியூஸ் போடுவதட்க்கு கூட எங்களிடம் கேட்டுத்தான் போடா வேணும். உங்கள் அநியாயங்களை பார்த்திட்டு சும்மா இருக்க நாங்கள் ஒன்னும் கோழைகள் இல்லை.

    ReplyDelete
  4. மக்களுக்கெதிரான வன்முறைகள் குறித்தான உண்மை நிலைமைகளை சர்வதேச சமூகத்திற்கு சொன்னது எப்படி தவறாகும் ,--பொய்யை , கட்டுக்கதை என்றால் தவறு --மக்கள் பாதிக்கப்படுமளவுக்கு அரசு மவுனமாய் இருந்தது - நியாயமா - இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் ,வரும் தேர்தலில் பார்த்துக்கொள்வோம்

    ReplyDelete

Powered by Blogger.