Header Ads



அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றிகள்..!!

கடந்த சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருந்த இனவாத சம்பவங்கள், பயங்கரமான நிலை ஓரளவுக்கு முடிவுக்கு வந்துருப்பது நிம்மதியை அளிக்கறது 

இந்த அளவுக்காவது அமைதி  அடைந்ததட்கு காரணமான எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி கூறியகனாக  விஷேடமாக, சபபாக (Sabab)இருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதுர்டீன் அவர்களுக்கும்.  முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்  அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்களுக்கும்   எமது நன்றிகளும் துஆக்களும் உரித்தாகட்டும். 

மற்றும் அமைச்சர் M.H.A.ஹலீம் ,பிரதி அமைச்சர் H.M.M.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர்ரஹ்மான்  ஏனைய அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், உலமாக்கள் , புத்தி ஜீவிகள் அனைவருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் என்ற வகையில் எனது/எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிப்பாக அசம்பாவிதங்கள் நடந்த  இடங்களுக்கு  உடனடியாக சென்று தகுந்த நடவடிக்கைகள் எடுத்த அமைச்சர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் துஆக்களும். 

நிலைமை தற்போதைக்கு சுமுகமான  நிலையை அடைந்தாலும் எமது மக்கள் மிகவும் விழிப்படணும் , அவதானத்துடனும்  இருக்க வேண்டும்.  எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

கடந்த ஓரிரு தினங்களில்   நடந்த சம்பவங்களை எதிர்த்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் நாமும் குரல் கொடுத்துக் கொண்டுதான்   இருந்தோம். ஜனாதிபதிக்கும் , ஏனைய  அதிகாரங்களுக்கும்  தொடர்ச்சியாக எமது  
அழுத்தங்களை கொடுத்துக்கொண்டிருந்தோம் ,  நிலைமை இப்படி தொடரும் என்றால் நாங்கள்  கட்சியில் தொடர்ந்தும்  இருப்பது கேள்விக்குரியதே என்றும் எடுத்துரைத்தோம் .

ஆம் .... நிச்சயமாக  எமது சமுதாயத்தின் நிலைமை இவ்வாறு தொடரும் என்றால்  நாம்  எதட்கு இந்த கட்சியில் இருக்க வேண்டும்  எதிர்  வரக்கூடிய தேர்தல் காலங்களில் மக்களிடம் நாம் எவ்வாறு முகம்  காட்ட  முடியும்........

எனவே நாட்டில் உள்ள அனைத்து முஸ்லீம்  அமைப்பாளர்களும்  தத்தமது கட்சித்தலைவர்களுக்கும் , செயலாளர்களுக்கும்  எழுத்து மூலமான  அழுத்தங்களையும் கொடுப்பதோடு எந்தக் கட்சியானாலும்  ஜனாதிபதிக்கும் , பிரதமருக்கும் ஒரு  பிரதி அனுப்பவும். முஸ்லீம் அல்லாத சகோதரர்களான 
 சிங்கள, தமிழ் அமைப்பாளர்களிடமும் இந்த வேண்டுகோளை வைக்கலாம். 

 இப்போதாவது  அரசாங்கம் தகுந்த நடவடிக்கை  எடுத்ததட்கும் ,முக்கியமான 
10 பேர் கைதாவதட்கும், ஏனைய கைதிகளுக்கும், மற்றும் நிலைமை ஓரளவுக்கேனும்  சுமுகமாக அமைவதட்கும் காரணமான முயட்சிகளாவன:

1.முஸ்லீம்,தமிழ் ,  சிங்கள அமைச்சர்கள் , பாராளுமன்ற  உறுப்பினர்கள் கட்சி பேதம்    பாராது ,ஜாதி பேதம் பாராது தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்துக்    கொண்டிருந்தமை.

2.  ஒவ்வொரு குழுக்களும் ஜனாதிபதிக்கு , பிரதமருக்கு  நேரடியாகவும்      மறைமுகமாகவும் கொடுத்த  அழுத்தங்கள் .

3.குறிப்பாக வெளிநாடுகளில் இருக்கக் கூடிய எமது  சகோதரர்கள் எடுத்த     முயட்சியும் பாரியளவு தாக்கத்தை உண்டு பண்ணியது .

4.ஐக்கிய நாடுகள் சபையால் கொடுக்கப்பட்ட  அழுத்தங்கள். இன்னும் பல ...............

இந்த நேரத்தில் முக்கியமாக,இன மத வேறுபாடு  பார்க்காமல் குரல்  கொடுத்த எதிர்க்கட்சி தலைவர் திரு. சம்பந்தன் அய்யா   அவர்களுக்கும் . ஏனைய தமிழ் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்  எமது சமுதாயம் நன்றி  கூறக்கடமைப்பட்டிருக்கிறது.

 முடியும் என்றால்  எமது அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் மேட்படி நபர்களுக்கு நேரடியாக  நன்றிகளை தெரிவிக்கவும் அது  எதிர்காலத்துக்கும் ஆரோக்கியமானதே .  

ஷியாம்தீன் (D.Litt.,USA)
கண்டி மாவட்ட அமைப்பாளர் 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 

1 comment:

  1. Just pls answer;
    1. what about those two/three MPs from your party who involved in this criminal act...?
    2. What about the attack on Moulavi Sattar and he was hospitalized..? Why any person/ media is not comment about this..?

    ReplyDelete

Powered by Blogger.