Header Ads



கொல்லப்பட்ட சிங்கள, இளைஞன் பற்றிய குறிப்பு

-Inamullah Masihudeen-

திகன, தெல்தெனிய, மெதமஹநுவர சம்பவத்தில அடித்துக் கொல்லப்பட்ட சிங்கள இளைஞனின்,

* தந்தை சீனி நோயால் காலை இழந்தவர்.

* தாய் பாரிசவாதத்தால் முடக்கப்பட்டவர்.

* தங்கை குடும்ப சூழலால் மனநோயாளியானவர்.

* பொதுப் போக்குவரத்து குறைந்த பிரதேசமாகையால் சில நேரங்களில் பள்ளி ஜமாத்தாரை தனது லொறியில் பிரதான பாதைக்கு இலவசமாக ஏற்றிச் செல்வான்.

* வறுமையான குடும்பம்.

* குடும்ப சூழல் அவனை 24 மணிநேர உழைப்பாளியாக்கி இருந்தது.

உழைப்பின் நிமித்தம் நள்ளிரவு நேரம் அவனுடைய லொறியை பின்நோக்கி நகர்த்தும் போது நிறுத்தியிருந்த முச்சக்கர வண்டியின் 160/= ரூபாய் பெறுமதியான பக்கவாட்டு கண்ணாடி உடைந்து விடுகிறது.

அருகிலே சாராயம் குடித்துக் கொண்டு இன்பமாக இருந்த முச்சக்கரவண்டியின் முஸ்லிம் உரிமையாளரும் அவரின் நண்பர்களும் இதனைக் கண்டு விடுகிறார்கள். கண்ணாடி இருந்த மாதிரி அப்படியே இருக்க வேண்டும் என்று சண்டைக்கு வருகிறார்கள். .இந்த நடு இரவில் கண்ணாடி எடுக்க நான் எங்கே போவது?

விடிந்தவுடன் திருத்தித் தருகிறேன். அல்லது இதோ 1000 ரூபா தருகிறேன் கண்ணாடியைப் போட்டுவிட்டு மீதியைத் தாருங்கள் அல்லது எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான். ஆனாலும் துரத்திப் பிடித்து அடித்துக் கொல்லப்பட்டான்.

கீழே தரப்பட்டுள்ள கவலை தரும் தகவலை பலரும் என்னிடம் சொல்கிறார்கள்.

முதலாவது: ஊர்ஜிதம் செய்து கொள்ள விரும்புகின்றேன்.
இரண்டாவது: உண்மையாயின் முஸ்லிம் சமூகம் தம் மத்தியில் உள்ள உஷார் மடையர்களை, காடையர்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக : குற்றமிழைப்போர் எந்தப் பக்கம் இருந்தாலும் சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப் படுவது ஊர்ஜிதம் செய்யப் படல் வேண்டும்.
நான்காவதாக : பொறுப்பற்ற சிலரின் நடவடிக்கையினால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டை சமூகமாக நாம் செலுத்துவது ஒரு கூட்டுப் பொறுப்பாகும். (அந்த வகையில் தெல்தெனிய மக்கள் முன்மாதிரியாக நடந்து கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கது.)
ஐந்தாவதாக: ஒருசிலரின் தனிப்பட்ட தகராருகளை வைத்து சமூகத்தை தண்டிக்கும் முட்டாள் தனமான அணுகுமுறைகள் பலமாக சகல தரப்புக்களாலும் கண்டிக்கப் படுவதனை உறுதி செய்தல் வேண்டும்.
ஆறாவதாக: தற்போதைய நாட்டின் களநிலவரங்களை கவனத்தில் எடுத்து முஸ்லிம் கிராமங்களில் குறிப்பாக நகர் புறங்களில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள், பாடசாலை மாணவர்கள், வியாபாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வேண்டும்.
ஏழாவதாக : ஊர் மஹல்லா மட்ட ஆலோசனை (ஷூரா) சபைகள் மூலம் கட்சி அரசியல இயக்க வேறுபாடுகளுக்கப்பால் கூட்டுப் பொறுப்புடன் முஸ்லிம் சமூகம் வழி நடத்தப் படுவதன் அவசியம் உணரப்பட்டு உடனடியாக நாம் அவ்வாறான பொறி முறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
எமது எதிரி உள்வீட்தில் தான் பாய் விரித்து படுத்திருக்கிறான். ஜாஹிளிய்யத்து.

8 comments:

  1. Sad to hear this message. Such a good man was hit and killed by brutal animal who lives under the name of Islam, but not only doing bad thinks, but also inviting problem to good people.

    No question,, we have to do a lot to correct our youth on the streets who waste time for nothing and involving in many bad thinks.

    It is high time for us to identify such bad youth and correct them, If they do not get into the control of the society.. They should be handed over to police without any delay.

    The youth, who
    1. spend time on road side for no purpose
    2. involve in drinking alcohol in any form
    3. involve in gambling and so on...

    Should be give notice of warning to correct themselves, if not should inform of their activity to near by police.

    May Allah Protect All Good People on earth.

    ReplyDelete
  2. It really grieves me to know about the news of brutal killing of a such a good man. Because of this barbaric act of thus in our society, our innocent people also affected severely. I express my condolence & sympathy on his family and friends.

    ReplyDelete
  3. First Jaffna Muslim is one side
    It is expressing it’s view the dead person singularly
    Other side the so called auto driver in plural
    Sir, be neutral no bias
    Rifai
    Very bad expression of Jaffna Muslim

    ReplyDelete
  4. TV Derana shown a totally different story regarding his death.

    ReplyDelete
  5. பெரும்பாலான முஸ்லீம் [AUTO DRIVASS ] முஸ்லிகளுடனாயினும் மனிதாபி மானதுடன் நடந்து கொள்வது அரிது , சிங்களவர் அநேகர் அப்படி இல்லை , நியாயமா கட்டணம் எடுப்பார்கள் , / மரணமான சகோதரன் உடல் நிலை தேறிய நல்ல நிலைக்கு வந்த பின்பு ,இறந்ததாகவும், மர்மம் உள்ளது என்றும் சில செய்திகள் வருகின்றன

    ReplyDelete
  6. yes , specially muslims auto people mostly charging high rates!! sinhalese people charging reasonable.

    ReplyDelete
  7. how can we believe it is true message ? i think it is wrong information admin please consider.
    thanks

    ReplyDelete

Powered by Blogger.