Header Ads



மாணவர்களுக்கு மீண்டும் சீருடை துணி, தலையிடுகிறார் சஜித்


அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்கு பதிலாக மீண்டும் சீருடை துணிகளை வழங்க எண்ணியுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் பெரும் மோசடிகள் இடம்பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சீருடைக்கு பதிலாக வவுச்சர் முறையை அறிமுகப்படுத்தியது.

இந்த வவுச்சர் முறையின் மூலம் சீருடை துணிகளை கொள்வனவு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பெற்றோர் தெரிவித்து வந்தனர்.

இதனால், மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணசிங்க பிரேமதாச பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆம் வவுச்சர் முறை மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடியது. சீருடை வழங்குகையில் ஏற்படும் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதை விடுத்து மக்களை வவுச்சர் மூலம் சிரமத்தில் ஆழ்த்துவது மடைமைத்தனமான சிந்தனை.(ஏ.எம்.ஆரிப், நிந்தவூர்)

    ReplyDelete

Powered by Blogger.