Header Ads



ஜும்ஆத் தொழுகையின் பின், பௌத்ததேரர் ஆற்றிய உரை


(மொஹொமட்  ஆஸிக்)

கண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடம் பெற்று வந்த  அசாதாரண சூழ் நிலை காரணமாக மாவட்டத்தில்ப ல பகுதிகளிலும் மக்கள் மத்தியில் இணங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கசப்புத் தன்மையை அகற்றி மீண்டும் வழமை போன்று சக வாழ்வுடன் வாழ்வதற்கு வழி வகுக்கும் வகையில்  கண்டி மாவட்டத்தில்பௌத்த மற்றும் இஸ்லாம் மதத் தலைவர்கள் பாரிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன் இரு கட்டமாக கண்டி கல்ஹின்னை ஜும்மா பள்ளிவாசலுக்கு இன்று 16ம் திகதிவௌளிக் கிழமை ஜும்ஆத் தொழுகையின் போது பௌத்த தேரர்கள் சமூகம் தந்திருந்ததுடன், அங்கும்புரை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பாலித ஜயரத்ன உற்பட பலரும் சமூகம் தந்திருந்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த அலவத்தை  விஹாரையின், அலவத்தே ஞானரதனதேரர்,  

இனங்களுக்க மத்தியில் ஏற்படும் இவ்வாரான அசாதாரண சூழ்நிலைகளுக்கு பொய் பிரச்சாரம், ஒவ்வொருவர் மீது ஏற்படும் சந்தேகம்பொருமை இல்லாமை, மற்றும்  மது மாணம் உற்பட போதைப்பொருள் பாவனையும் காரணமாகி உள்ளதாகவும்,

இச் சம்பவங்கள் இனவாதத்தால் ஏற்பட்டதல்ல ஏதோ ஒரு அரசியல் காரணத்தால் ஏற்படுத்தி எங்கள் மேல் சுமத்தி விட்டு அவர்கள் தப்பிச்சென்றுள்ளதே  தென்படுகின்றது என்றும் அவர் இங்குதெரிவித்தார்.

ஆகவே சிங்கள முஸ்லிம் மக்களாகிய நாங்கள் பல நூறு வருடங்கள் ஒற்றுமையாக இங்கு வாழ்கின்றோம்  அவ் ஒற்றுமையை எங்கெயோ உள்ள அரசியல்வாதிகளின்தேவைக்காக சீர் குழைக்க இடமளிக்கக் கூடாது.

 கல்ஹின்னை உள்ளிட்ட இப் பிரதேசத்தில் பாரிய எவ்வித சம்பவமும் இடம்பெற வில்லை.  இதன் பின்பும்  இவ்வாரான சம்பவங்கள் இடம் பெறுவதற்கு நாங்கள் எவரும் இடமளிக்க மாட்டோம்  என்றும் அவர் இங்கு கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் இம்  முறை போட்டியிட்டு பூஜாபிட்டிய பிரதேச  சபைக்குதெரிவாகியுள்ள உவைஸ் ரஸான் அவர்களின் முயற்சியால் கல்ஹின்னை ஜம்மியதுல் உலமா சபையின் பங்களிப்புடன் இந் நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.



1 comment:

  1. சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள் - முஸ்லிம்களை நம்பி தமது பெண்களையே கொடுத்தார்கள் , அண்மைய காலமாக முஸ்லீம் மீது வெறுப்புற்று இனவாதம் வளர்த்தது - எமது அரசியல் , வியாபாரம் , கொடுக்கல் வாங்கல், எமது பழக்கவழக்கம், எல்லாம் சுயநலமாய்ப்போனதால் நாமே வெறுப்பை தேடிக்கொண்டோம் ..... எமது அரசியல் வாதிகளை விட , நல்ல அரசியல்வாதிகள் அவர்களில் உண்டு , முஸ்லீம் அரசியல் வாதிகளே ஜாக்கிரதையாக இருங்கள் , உங்களுக்கு பதிலாக அவர்களை கொண்டுவருவதை பற்றி யோசிப்போம்

    ReplyDelete

Powered by Blogger.