Header Ads



இனவாத வன்முறை பற்றி ஐ.நா. கரிசனை - பெல்ட்மன் கண்டியில் மதத் தலைவர்களை சந்திப்பார்

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்டிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் இன்னர்சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது, ஐ.நாவின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பரவலாக முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய வன்முறைகள் பதிவாகிய நிலையில், அங்கு அவசரகால நிலைமையும் அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் ஜெப்ரி பெல்மனின் இலங்கை பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது என இன்னர்சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள ஐ.நா பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், இந்தப் பயணமானது அண்மைய அவசரகால நிலைமைக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும்.

உதவிச் செயலர் கண்டிக்கு பயணம் மேற்கொள்ளவும் எதிர்ப்பார்த்துள்ளார். அங்கு மதத்தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவாத வன்முறைகள் தொடர்பில் தாம் கரிசனை வெளியிடுவதாகவும் ஐ.நா பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பதற்றத்தை தனித்து, நல்லிணக்கத்தை எட்ட அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கலந்துரையாடல்கள் மூலம் வேறுபாடுகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் தாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐ.நா பேச்சாளர் கூறியதாக இன்னர்சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

1 comment:

  1. Dear UN, “இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட கூடாது” என முஸ்லிம்கள் ஊர்வலங்கள் வைத்ததையும், முஸ்லிம் தலைவர்கள் ஜெனிவா வரை வந்து UN க்கு எதிர்ப்புகள் தெரிவித்தும் ஞாபகம் இருக்கோ?

    “தன் வினை தன்னை சுடும்” என்பது ஒரு பழமொழி.

    ReplyDelete

Powered by Blogger.