Header Ads



மகிந்த மீள்வருகை – வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலை

மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் கவலையடைந்துள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, மேற்குலக இராஜதந்திரிகள், சிறிலங்கா அரசாங்கத்திடம் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக கூட்டு எதிரணியினருடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களை ஆரம்பித்ததை அடுத்தே, வெளிநாட்டு இராஜதந்திரிகள் கவலையடைந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைக்கப்பட்டால், அது ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு அமைக்கப்படும் பாதையாக இருக்கும் என்றும் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராஜபக்ச  மீண்டும் அதிகாரத்துக்கு வர அனுமதிக்கப்பட்டால், சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலைமைகள் மீண்டும் பழையபடி இருண்ட நாட்களுக்குத் திரும்பும் என்றும் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், சிறிலங்காவுக்கான அமெரிக்க, பிரித்தானிய, இந்திய, சீன தூதுவர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஈமான் கொண்டவர்களே! (வழி தவறிவிடாமல் நீங்களே) உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நேர்வழியைப் பின்பற்றுவீர்களானால், வழி தவறியவர்கள் உங்களுக்கு ஒரு தீங்கும் செய்ய முடியாது. அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் அனைவரும் மீள வேண்டியிருக்கின்றது; நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றையெல்லாம், அப்போது அவன் உங்களுக்கு உணர்த்துவான்.
    (அல்குர்ஆன் : 5:105)

    ReplyDelete

Powered by Blogger.