Header Ads



மீதித் தொகையை, செலுத்தாத ஜனாதிபதி


மாத்தறை நகர சபைக்கு செலுத்தவேண்டிய இருபத்தி எட்டாயிரத்து 764 ரூபா தொகையை ஜனாதிபதி செயலகம் மீதி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு தடவைகள் மாத்தறை நகருக்கு ஹெலிகொப்டர் மூலம் வருகை தந்திருந்தார்.

2018-01-12 ம் திகதி அக்குரஸ்ஸை நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டம் மற்றும் 2018.02.06 ம் திகதி நில்வலா மைதானத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டம் ஆகியவற்றில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

இதற்காக ஜனாதிபதியின் ஹெலிகொப்டர் தரையிறங்கும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாத்தறை நகர சபை தீயணைப்பு வண்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

ஜனாதிபதி பதவிக்கான அலுவல் ரீதியாக அன்றி தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரக் கூட்டத்துக்காக அவர் வருகை தருவதால் தீயணைப்பு வண்டிகளுக்கு கட்டணம் செலுத்துமாறு மாத்தறை நகர சபை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்திருந்தது.

ஜனாதிபதி செயலகமும் அதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் தீயணைப்பு வண்டிகளின் சேவைக் கட்டணமாக 28 ஆயிரத்து 764 ரூபாவுக்கான வவுச்சர் மாத்தறை நகர சபையினால் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி செயலகம் அதற்கான கொடுப்பனவை இதுவரை செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.

எனினும் மாத்தறை மாவட்டத்துக்கு இரண்டு தடவைகள் வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனது ஹெலிகொப்டர்கள் தரையிறங்கும் ​போது பெறப்பட்ட தீயணைப்பு வண்டிகளின் சேவைக் கட்டணமாக 36 ஆயிரத்து 394 ரூபாவை தேர்தலுக்கு முன்னதாகவே செலுத்திவிட்டதாகவும் மாத்தறை நகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.