Header Ads



சிரிய மக்களுக்காக, நாம் செய்ய வேண்டியது..!


அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையின் இறுதி ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறிய பிறகு குனூத்' ஓதினார்கள். அதில்,

இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் காலத்துப் பஞ்சம் நிறைந்த (ஏழு) வருடங்களைப் போன்று இவர்களுக்கும் சில வருடங்களை அளிப்பாயாக!

என்று பிரார்த்தித்தார்கள்.

நூல் : புகாரி 6393

நபியவர்கள் செய்த பிராரத்தனையின் அளவை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

எனவே நாமும் இதே அளவிற்கு மிகவும் நீண்டு விடாமல் சோதனைக்கால பிரார்த்தனையைச் செய்ய வேண்டும்.

“யா அல்லாஹ் ! சிரியாவில் பாதிக்கப்படும் முஸ்லிமான பலவீனமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பாயாக!

அவர்களுக்கு உன் உதவியை இறக்கி அவர்களைப் பலப்படுத்துவாயாக!

இறைவா சிரியாவில் அநியாயம் செய்யும் சிரியப் படைகள், ரஷ்யப்படைகள், ஈரான் படைகள் மீது உன் பிடியை இறுக்குவாயாக! அவர்கள் மீது உன் சாபத்தை இறக்குவாயாக.."

என்பது போன்ற பிரார்த்தனைகளை நாம் செய்யலாம்.

கைகளை உயர்த்தி பிரார்த்திக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.