Header Ads



இந்துவுக்கு நீதி வழங்கிய, இஸ்லாமிய நீதிபதிகள்

மலேசியாவில் கோலாலம்பூரை சேர்ந்தவர் இந்திராகாந்தி. இவருக்கு மூன்று பிள்ளைகள்.. ஒன்பது ஆண்டுக்கு முன் இவர் கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார்.

அதோடு தன் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மாற்றிவிட்டு.. பெயரையும் அரசு கெசட்டில் பதிவு பன்னி இருக்கிறார்.. இதை எதிர்த்து தாயார் இந்திரா வழக்கு தொடுத்தார்... நேற்று உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச்சில் விசாரணை முடிந்து தீர்ப்பு வந்தது.

அதன்படி.."பிள்ளைகளை தந்தை மட்டும் தன்னிச்சையாக இஸ்லாத்தில் மாற்றியது செல்லாது என்றும்.. மதம் மாறவேன்றுமென்றால் தாயாரின் சம்மததோடு பெற்றோர் இருவரும் கருத்தொற்றுமை ஏற்பட்டு முடிவு செய்ய வேண்டும்.. ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவை ஏற்று கொள்ள முடியாது"  என்று தீர்ப்பு சொல்லி பிள்ளைகள் தாயோரோடு சேர்க்க உத்தரவு போட்டு விட்டனர்.

இதில் கவனிக்கவேண்டியது.. மலேசியா இஸ்லாமிய நாடு..வழக்கை விசாரித்த நீதிபதிகள் இஸ்லாமியர்கள்... ஆனாலும் நீதியை நிலை நாட்டியுள்ளனர்.

வலுக்கட்டாயமாக யாரையும் இஸ்லாத்தில் இணைக்க இயலாது
என்பதை..எடுத்து சொல்லி இருக்கின்றனர்.

- இஸ்மாயில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்-குர்ஆன் ஸூரா அல்-மாயிதா= 5:8)

2 comments:

  1. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
    (அல்குர்ஆன் : 2:256)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.