Header Ads



மகிந்தவின் வெற்றியும், எழுச்சியும் தணிந்து போனதா..?

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்து இன்றுடன் 13 நாட்கள் கடந்துள்ள போதிலும் இதுவரை உள்ளூராட்சி சபைகளில் எந்த கட்சியும் அதிகாரத்தை ஸ்தாபிக்கவில்லை.

எனினும் இதற்கு முன்னர் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் போது, தேர்தல் முடிந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் வெற்றி பெற்ற கட்சிகள் அதிகாரத்தை ஸ்தாபித்துள்ளன.

இந்த நிலையில், நடந்த முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலைமையில், உள்ளூராட்சி சபைகளில் அதிகாரம் ஸ்தாபிக்கப்படமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகமான உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றிருந்தது.

உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தை ஸ்தாபிப்பது தாமதமாகியுள்ளதால், பொதுஜன பெரமுன பெற்ற வெற்றி அதனோடு ஏற்பட்ட மகிந்த ராஜபக்ச ஆதரவு நிலைமையும் படிப்படியாக குறைந்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், பிரதமரை மாற்ற வேண்டும், ஐக்கிய தேசியக்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என முன்னெடுக்கப்பட்ட அரசியல் ரீதியான பரப்புரைகள் இந்த நிலைமைக்கு காரணம் என கூறப்படுகிறது.

அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்த பிரதமர் உட்பட அரசாங்கத்தின் மாற்றம் தொடர்பான பரப்புரைகளால், மக்கள் பொதுஜன பெரமுனவின் வெற்றியை மறந்து விட்டு தமது அரசியல் பார்வையை வேறு பக்கம் திரும்பியுள்ளனர்.

தேசிய அரசாங்கம் தொடர்பாக இருந்து வந்த இழுப்பறி முடிவுக்கு வந்த நிலையில், தற்போது அமைச்சரவை மாற்றம் தொடர்பான விடயம் ஊடகங்களில் முக்கியத்துவத்தை பெற்றது.

ஆனாலும் அதுவும் இன்னும் முடிந்தபாடில்லை என்பதால், மக்கள் தேர்தல் முடிவு, அரசாங்கம் மற்றும் அமைச்சரவை மாற்றம் என்பன தொடர்பிலான தமது கவனத்தை கைவிட்டு, வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதனால், மகிந்த தரப்பு வெற்றியின் எழுச்சியை அரசாங்கம் தற்காலிமாக தணிக்க செய்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.