Header Ads



வாக்காளருக்கும், வேட்பாளருக்கும் ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்


உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது. தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. இவ்வேளையில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள,; வழிகாட்டல்களை வழங்கும் தார்மிக கடப்பாடு எமக்கு உண்டு என நாம் நம்புகின்றோம். நாட்டைக் கட்டியெழுப்பும் மகத்தான பணிக்கு வாக்குரிமையின் மூலம் பங்களிப்புச் செய்வதற்கான சந்தர்ப்பமாகவே தேர்தல்களை நோக்க வேண்டும் என்பதை ஆரம்பமாக வாக்காளர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.  

நமது தாய் நாட்டில் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நல்லாட்சிக்கான அடித்தளத்தை இடுவதற்கும் இந்நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் அரிய சந்தர்ப்பமாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலைக் குறிப்பிட்டால் அது மிகையாக மாட்டாது. 

தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஷபாஅத் எனும் சிபாரிசு செய்தலாகும்; வகாலத் எனும் பொறுப்புச் சாட்டலாகும் இவையனைத்துககு;ம் மேலாக அது மார்க்கத்தில் ஷஹாதத் எனும் சாட்சி சொல்லலாகும். அது பொய் சாட்சியமாக அமைந்து விடாமல் மெய் சாட்சியமாக அமைய வேண்டும் என்ற வகையில் வாக்காளர்கள வாக்களிப்பில் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்: 

Ø ஏமாற்று, மோசடிகளில் சம்பந்தப்படாத, பாவமான முறைகளில், முறைகேடான வழிகளில் பொருளடீ;டலில் ஈடுபடாத, நன்னடத்தையும் நல்லொழுக்கமும் உடையவர்களுக்கே எமது வாக்குகள ;அளிக்கப்பட வேண்டும். 
Ø நாட்டை நேசிக்கின்ற, சமூகப்பற்றுளள், ஊரைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் கொண்டவர்களாக எமது வாக்குகளைப் பெறுபவர்கள் இருப்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொளள் வேண்டும்.  
Ø பதவிகளைப் பெறுவதற்கும் வருமானம் ஈட்டுவதற்குமான வழியாக அரசியலைக் கருதாமல் அதனை ஓர் உயர் சமூகப் பணியாகக் கருதி செயற்படுபவர்களாக எமது தெரிவுக்குரியவர்கள் அமைதல் வேண்டும். 
Ø நாட்டுச் சட்டங்களை மீறுகின்ற, வன்முறைகளில்  ஈடுபடுகின்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்படல் வேண்டும். 

Ø இன, மத வாதங்களைத் தூண்டும் வகையில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்போருக்கு வாக்குகள் அளிக்கப்படலாகாது. 

Ø மாற்று அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் தூஷிக்கின்ற, அவமதித்துப் பேசுகின்ற, பண்பாடற்ற வேட்பாளர்களும் எமது தெரிவுக்குரியோர் அல்லர். 
சுருக்கமாகச் சொல்வதாயின், எமது வாக்குகள ; ஏக காலத்தில் நல்லவராகவும் வல்லவராகவும் விளங்குகின்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்திக் கொளளு;ம் கடப்பாடு நம் அனைவருக்கும் உண்டு. 
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக களமிறங்கியிருக்கின்ற கட்சிகளும் வேட்பாளர்களும் பின்வரும் வழிகாட்டல்களைப் பேணி நடக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்: 
v எமது தாய் நாடான இலங்கை மண்ணில் நல்லாட்சி மலர வேண்டும்; எல்லா சமூகங்களும் சமயத்தவர்களும் நல்லிணக்கத்தோடும் ஐக்கியமாகவும் வாழ வேண்டும்; நாடு சகல துறைகளிலும் வளர்ச்சி கண்டு முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதே உங்களது எதிர்பார்ப்பாக அமைதல் வேண்டும். இந்த வகையில் நல்லாட்சிக்கான சிறந்த முன்னுதாரண புருஷர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. 

v பதவி என்பது ஓர் அருள் மட்டுமல்ல, அது மிகப் பெரும் அமானிதம் என்பதையும் நீங்கள் மனதிற்கொளள் வேண்டும். மேலும் உங்களது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக அரசியல் வாழ்க்கையிலும் ஆன்மிக, தார்மிக, ஒழுக்கப் பண்பாடுகளை பேணுவதில் கரிசனையோடு இருத்தல் வேண்டும். 

v எளிமை, தியாகம், அர்ப்பணம் முதலான மெச்சத்தக்க பண்புகளாலும செயற்பாடுகளாலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமூகத்துககு;ம் சாட்சி பகர்பவர்களாக முஸ்லிம் வேட்பாளர்களும் அரசியல் தலைமைகளும் விளங்க வேண்டும். 

v நீதியைக் கடைபிடித்து நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொளவ்தோடு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடல், வன்முறைகளில் ஈடுபடல், மக்கள் மத்தியில் குரோதத்தையும் பகைமையையும் விதைத்தல் முதலான குற்றச்செயல்களில் ஈடுபடலாகாது.  
v எந்நிலையிலும் எமது நடவடிக்கைகள், செயற்பாடுகள் தனி மனிதர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ அநீதி இழைக்கும் வகையில் அமைந்து விடாமல் இருப்பதை உத்தரவாதப்படுத்துவது அவசியமாகும். 

v அவ்வாறே எமது சமூகத்தின் உரிமைகள் குறித்து பேசுகின்றபோது சகோதர இனத்தவர்களின் உணர்வுகள ;புண்படாத வகையில் நாகரிகமாகவும் இங்கிதமாகவும் பேசுவதும் செயற்படுவதும் முக்கியமானது. 
இறுதியாக எல்லா நிலைகளிலும் நாம் அனைவரும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொளN;வாமாக! அவன் நம் அனைவரையும் பொருந்திக் கொளவ்hனாக! 
  
அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் 
பிரதித் தலைவர் மற்றும் அரசியல் பிரிவு பொறுப்பாளர்  
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

1 comment:

  1. இன்றைய இலங்கை அரசியல் சூழலில், இவ்வனைத்து உயர்  கருத்துக்களுக்கும் அதி  தகுதியானவர்கள் JVP யினரே.

    ReplyDelete

Powered by Blogger.