Header Ads



முஸ்லிம் பெண்களை சிறுவயதில் திருமணம், முடித்துக் கொடுப்பது கொடுமையானது - பைசர் முஸ்தபா

கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் முஸ்லிம் பெண்களை சிறு வயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் அனுபவம் கொடுமையானது என்று அமைச்சர் பைசர் முஸ்தபா விமர்சித்துள்ளார்.

கொழும்பு-12, குணசிங்கபுர, அல்ஹிக்மா கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இது குறித்த கவலையை வௌியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா,

“பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் முடித்துக் கொடுக்கும் நிகழ்வின் காரணமாக முஸ்லிம் பெண்களில் படித்த தலைமுறையொன்றை உருவாக்கும் விடயம் சவாலாக அமைந்துள்ளது.

மறுபுறத்தில் ஆண்களும் வருமானமீட்டும் நோக்கில் கல்வியை இடைநிறுத்தி நடைபாதை வியாபாரிகளாக, முச்சக்கர வண்டி சாரதிகளாக மாறிவிடுவதன் காரணமாக குறித்த தொழில்கள் அவர்களின் பரம்பரைத் தொழிலாக மாறிவிடுகின்றன. தந்தை செய்த தொழிலை தனயனும் மேற்கொள்ளும் அவல நிலையே கொழும்பில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலை மாற வேண்டும். கல்வியில் உயர் நிலையை அடைய வேண்டும் என்றால் சிற்சில தியாகங்களை செய்தாக வேண்டும்” என்றும் அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. எங்கள் சட்டத்தில் கை வைக்காமல் இதை செய்யுங்கள் , தனிப்பட்ட கருத்த்துக்களை மார்க்கத்தில் நுழைக்காமல்

    ReplyDelete
  2. இந்த தீர்மானத்தை அரசியல்வாதிகள் எடுக்க அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்திருக்கின்றார்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் பேசாத ஒரு விடயத்தைத் தீர்மானிக்கும் உரிமையை அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தது யார்? இது பற்றி அவர்கள் கைவைக்க சமூகத்தில் உள்ள உலமாக்கள் அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமசோதாவில் கூறப்பட்டுள்ள உலமாக்களின் கருத்துப்படி 18 வயதுக்குக்கீழ்பட்ட முஸ்லிம் பெண்களை திருமணம் செய்து வைப்பது அவசியமாகக் அந்த பிள்ளையின் குடும்பம் தீரமானித்தால் அவர்கள் காழியிடம் அதுபற்றி முறையீடு செய்து அக்காழி அவர்கள் அந்தபிள்ளையின் நிலைமை,சூழல், தேவை போன்றவற்றை நன்கு ஆராய்ந்து அவருடைய தீர்ப்பை வைத்து திருமணம் செய்து வைக்கலாம்.அதுதவிர அந்த விடயங்களில் தலையிட அரசியல்வாதிகளுக்கு எந்தவகையிலும் அனுமதிக்கக்கூடாது. அதனால் ஏற்படும் பிரதிவிளைவுகளுக்கு யார் பதில் சொல்வது?

    ReplyDelete
  3. Many of our worriers have started blasting their guns at Faizer for this comment. For our community MMDA is the sharia law and THE only sharia law. Nobody would talk about many other critical aspects where our community is nowhere near the sharia rules, including riba and working for riba based organizations, which is a curse and equal to waging war against Allah & his messenger.

    Come on, for our common fellows, those who are working at higher positions at banks are the community leaders & advisers , whose businessman who deal 100% with riba are the trusty board leaders, politicians who are corrupt to the core are the saviors of all the issues..

    no action or voice against those. because by Sri Lankan layman Muslim standard they are the key elements of the society with connections from top to bottom. who would act as saviors of the community on period of chaos. Hence rules of sharia would not be applicable for them and overlooked conveniently.

    In other word, for rich & powerful sharia is an exemption. but for those are weak, sharia is implemented to the 100%.

    ReplyDelete
  4. சமூகத்தை பற்றி புரிந்துணர்வு இல்லாமல் உளறுகிறார் , இப்போது ஆண் பிள்ளைகளை விட , பெண் பிள்ளைகள் கூடுதலாக உயர் கல்வியை தொடர்கிறார்கள் . முஸ்லீம் பாடசாலைகளை பார்த்தாலே புரியும் , கூடுதலாக கற்பதும், கற்பிப்பதும் , பெண்களே , ஆசிரிய பயிச்சி கல்லூரி , பல்கலை கழகங்கள் , சென்று பார்த்தால் புரியும் , இந்த நிலையில் --சிறு வயது திருமணம் என்று சொல்வது அபத்தம் .


    ReplyDelete

Powered by Blogger.