Header Ads



தேர்தலுக்கு முன் ரவியை, கைதுசெய்ய நடவடிக்கை

இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தாமாகவே முன்வந்து கைதாகி அரசாங்கத்திற்கு தேர்தலில் சாதகத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டம் ஒன்று உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிந்த பின்னர் உடனடியாக விடுதலை செய்யும் திட்டத்திற்கு அமைய இதனை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் இன்று -31-  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், நல்லாட்சி அரசாங்கத்தை மீட்க ஆலோசனை வழங்கி ஆலோசகர்கள் இணைந்து இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

இந்த திட்டத்தின் முதல் கட்டமாகவே ரவி கருணாநாயக்கவை ஐக்கிய தேசியக்கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாகவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.