Header Ads



நீதிபதி வாகாப்டீன் இடைநிறுத்தம் - சிங்கள ஊடகம் கைங்காரியம்

-பாறுக் ஷிஹான்-

கிழக்கு மாகாணம் பொத்துவில் மாவட்ட நீதிபதி எம்.ஐ.வாகாப்டீன், அந்தப் பதவியிலிருந்து உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டார். 

குமண வனப்பகுதியில் முஸ்லிம்கள் சிலரால் முன்னெடுக்கப்படும் அத்துமீறி பயிர்ச்செய்கை நடவடிக்கை தொடர்பான வழக்கில் நீதிபதி மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்து நீதிச் சேவைகள் ஆணைக்குழு இந்த பணி இடைநிறுத்த உத்தரவை நேற்று வழங்கியது.

பொத்துவில் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட குமண வனப் பகுதியில் முஸ்லிம்கள் சிலர் சட்டவிரோதமாக காடழிப்பை மேற்கொண்டு நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றனர்.

முஸ்லிம்களின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் பொத்துவில் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஏற்க மறுத்தனர். அதனால் அந்த வழக்கு நீநிமன்றால் விசாரிக்கப்பட்டு வருகிறது. 

வழக்கு கடந்த சில மாதங்களாக திகதியிடப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் காணொலிப் பதிவு செய்த சிங்கள இலத்திரனியல் ஊடகம் ஒன்று சட்டவிரோத காடழிப்புக்கு துணை போகும் வகையில் நீதிமன்றமும் செயற்படுகின்றது என நீதிபதி மீது குற்றச்சாட்டை முன்வைத்து செய்தி விவரணத்தை கடந்த மாதம் வெளியிட்டது.

இது தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்தது. 

இந்த நிலையில் பொத்துவில் நீதிமன்ற நீதிவானும் மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.வாகாப்டீன் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் மாவட்ட நீதிபதி வாகாப்டீன் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் அந்தப் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக நீதிச்சேவை ஆணைக்குழு உத்தரவு வழங்கியது.

இதேவேளை, எம். ஐ.வாகாப்டீன் கிளிநொச்சி மாவட்ட நீதிபதியாக 2016ஆம் ஆண்டு இறுதிவரைப் பதவி வகித்திருந்தார்.

3 comments:

  1. பாருக் ஷிஹான் கவனத்திற்கு
    நீங்கள் முக்கியமான செய்தியொன்றை வெளியிடும் போது அந்த இடத்தின் பெயரையாவது உரியவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்தியபின் வெளியிடுங்கள். இறத்தல் எனும் முஸ்லிம்களுக்குச்சொந்தமான பிரதேசத்தின் இடது பக்கமுள்ள இடம் தான் இது. கள்ளத்தனமாக வர்த்தமானி அறிவிப்புச்செய்து அவ்விடத்தை லகுகல தனிச்சிங்கள பிரதேச சபைக்கு கீழ் கொண்டுவந்தார்கள். பானமைப்பகுதி இறத்தல் பகுதியைச்சேர்ந்ததாகும். குமனை அல்ல.
    நேரம் கிடைத்தால் குமனையை போய் பார்த்து விட்டு வாருங்கள். இனவாத சிங்கள ஊடகங்கள் உளறுவதை அப்படியே பதியாதீர்கள்.

    ReplyDelete
  2. Sri lankan situation day by day wasting.

    ReplyDelete

Powered by Blogger.