Header Ads



இலங்கைக்கு அமெரிக்கா, வழங்கிய முதலிடம்


இலங்கைக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகளுக்கு இலங்கை நாட்டில் பாதுகாப்பு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள சுற்றுலாப் பயணம் செய்ய உகந்த நாடுகள் தொடர்பான வழிகாட்டி அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், அமெரிக்கப் பிரஜைகளுக்கு இலங்கை பாதுகாப்பற்ற நாடு என்ற வரிசையில் பட்டியலிடப்பட்டிருந்தது.

அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பான நாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஏழாக தரம் பிரித்துள்ளது.

இதில் முதல் வரிசையில் உள்ள நாடுகள் மிகவும் பாதுகாப்பான நாடுகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, அவுஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகள் முதல் தரவரிசையில் இடம்பெற்றுள்ளன.

இலங்கையும் இந்தப் பட்டியலில் இருப்பதால் அமெரிக்காவில் இருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, மெக்சிகோ, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இரண்டாம் தரவரிசைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ரஷ்யா மூன்றாவது இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மத்திய ஆபிரிக்க குடியரசு, லிபியா, மாலி, சோமாலியா,தென் சூடான் போன்ற நாடுகள் மிகவும் ஆபத்தான நாடுகள் என்ற பட்டியலில் தரப்படுத்தப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.