Header Ads



காத்தான்குடிக்கு ஹக்கீம் போகக்கூடாதா..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு காத்தான்குடியில் சிப்லி பாறூக்கின் கூட்டத்திற்கு சென்று உரையாட முடியுமா என பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சவால் விடுத்துள்ளார்.

வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சிப்லி பாறூக் தலைமையில் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இவர் ரவூப் ஹக்கீமிடத்தில் விடுத்த வேண்டுகோள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக காத்தான்குடியில் கேட்பதாக இருந்தால் மரச்சின்னத்தில் நாங்கள் கேட்க மாட்டோம். தராசில் கேட்கின்றோம் இதுதான் முதலாவது நிபந்தனை.

இரண்டாவது நிபந்தனை எக்காரணம் கொண்டும் காத்தான்குடிக்கு ரவூப் ஹக்கீம் வரக்கூடாது. நான் பொய் சொல்லவில்லை. இந்த ரவூப் ஹக்கீமுக்கு சவால் விடுகின்றேன் முடியுமென்றால் காத்தான்குடியில் சிப்லி பாறூக்கின் கூட்டத்திற்கு சென்று பேசிப் பார்க்கட்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நெறிமுறை இருக்கின்றது. கட்சியில் உள்ளவர்களின் விளக்க ஞானம் உயர்வாக பார்க்கப்படுகின்றது. வடக்கிலும், கிழக்கிலும் வாழ்வதை விட இரண்டு மடங்கு முஸ்லிம் வடக்கு, கிழக்கிற்கு அப்பால் வாழ்கின்றார்கள்.

இலங்கையில் பதினான்கு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. அங்கு ரவூப் ஹக்கீம் என்கின்ற ஏமாற்று பேரொளி தோற்க வேண்டும், எமது கட்சி வாழ வேண்டும் என்று மக்கள் பார்க்கின்றார்கள்.

கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலினால் ஏமாற்றப்பட்டு போன பிரதேசம் பிறைந்துறைச்சேனை பிரதேசம், பிரதேச பாடசாலைக்கு மூன்று மாடி, வடிகாண் அமைத்தல் எல்லாம் செய்து தருவதாக கூறி ஏமாற்றினார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.