Header Ads



மகிந்தவின் குடியுரிமையை பறித்தால், விளைவுகளை எல்லோரும் பார்க்க முடியும் - பீரிஸ் எச்சரிக்கை

மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளை, சிறிலங்கா அரசாங்கம் முடிந்தால் ரத்துச் செய்து பார்க்கட்டும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின்  தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.

”தேர்தலில் தாம் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமைகளை, முன்னாள் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன பறித்தார்.

தன்னைவிடப் பிரபலமானவராக சிறிமாவோ பண்டாரநாயக்க இருப்பதாக உணர்ந்து கொண்டதால் தான், ஜே.ஆர்.அவரை வெட்டி விட்டார்.

ஒட்டுமொத்த நாடுமே இன்று மகிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

அவர் அரசியல் ரீதியாக அச்சுறுத்தப்பட்டால் மக்கள் எப்படி பதிலளிப்பார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.

அவரது குடியியல் உரிமைகளைப் பறித்தால் அதன் விளைவுகளை எல்லோரும் பார்க்க முடியும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.