Header Ads



நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை - சவூதி அரேபியா முடிவு


சவூதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது என அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளன.

சவூதி அரேபியாவில் சுமார் 6 ஆயிரம் தங்கம் மற்றும் வெள்ளி நகை தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 35 ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்நிலையில், இனி நகைக்கடைகளில் வெளிநாட்டவர்களை பணியில் சேர்க்கக்கூடாது என தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. உள்ளூர்மயமாக்குதலின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அதிகாரத்தின் கீழ் 13 பிராந்தியங்கள் உள்ளன. அவற்றில் குவாசிம், டாபக், நாஜ்ரன், பாகா, அசிர், வடக்கு எல்லை மற்றும் ஜாசான் ஆகிய 7 பிராந்தியங்களில் உள்ள சவூதி மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நகைக்கடைகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.

இது குறித்து தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் காலித் அபா அல்-காய்ல் கூறுகையில், 'நாட்டில் உள்ள கடைகளில் உள்ளூர் மக்கள் அதிக அளவில் வேலைப்பார்ப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஆய்வாளர்கள் 5,960 கடைகளில் நடத்திய ஆய்வில், 210 கடைகளில் வெளிநாட்டவர்கள் பணி புரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகள் அரசு நிறுவனங்களின் உதவியுடன் விரைவில் உள்ளூர்மயமாக்கப்படும்.' என அவர் கூறினார்.

3 comments:

  1. சவுதி பொருளாதாரத்துறையில் தனது சொந்தக்காலில் நிற்க முயற்சிப்பது ஒன்றும் தவறில்லை.

    ஆனாலும் எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியமான மார்க்கவிடயத்தில் இஸ்லாத்தை விட்டுவிட்டு மற்றவர்களைக் கொப்பி அடிக்க முயற்சிப்பதுதான் - கெடுமையிலும் கொடுமை ..........

    வளிகாட்ட வேன்டியவர்கள் வழிதவறிப் போவதுதான் கேவலத்திலும் கேவலம்................

    ReplyDelete
  2. Yes Mohamed Raffi, I Agree with you.

    ReplyDelete
  3. றாபி.நமக்குரிய வழிகாட்டி குன்ஆனும் ஆதார பூர்வமான ஹதீஸும் அல்லவா?

    ReplyDelete

Powered by Blogger.