Header Ads



முஸ்லிம் தலைவர்களின், ஏகாதிபத்தியம் நன்கு புலப்படுகின்றது - இனவாதம் பேசும் கருணா

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் கி.துரைராசசிங்கம், பணத்தினை பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளார் என தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

இதனை வெளிப்படையாக ஊடகங்களில் வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு பாரிய அபிவிருத்தியை செய்துவிட்டுத்தான் நாங்கள் தமிழ் மக்கள் முன்னிலையில் வாக்கு கேட்டு வருகின்றோம். தமிழ் மக்களின் அபிலாசைகளை வேறு இனத்தவர்க்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு வாக்கு கேட்டுவரவில்லை.

நாங்கள் தமிழர் ஐக்கிய முன்னணி எனும் கட்சியில் தையல் இயந்திரச் சின்னத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

இந்த தேர்தலில் எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் முதலமைச்சர் ஒருவரை உருவாக்குவதற்கான அடி அத்திவாரமாகக் கொண்டு நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம், இதனை கிழக்கு மக்கள் சரிவர புரிந்துக்கொள்ள வேண்டும்.

காரணம் கிழக்கு மாகாணத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் 11 ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்தும் தமிழ் முதலமைச்சரைக் கொண்டு வருவதற்கு இயலாமல் போய் 7 ஆசனங்களைக் கொண்ட முஸ்லிம் காங்கிரசிற்கு முதலமைச்சர் பதவியினை தாரைவார்த்துக்கொடுத்திருந்தனர்.

இதனால் கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலாபலன்கள் 4 வருடங்கள் இல்லாமல் போயுள்ளன.

அக்கால கட்டத்தில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு முஸ்லிம் பிரதேசங்கள் பாரிய அபிவிருத்தியை கண்டுள்ளன.

தமிழ் மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லை 11 உறுப்பினர்களும் மாகாண சபையில் நித்திரைக்கொண்டுவிட்டு வந்துள்ளனர். இத்தகைய நிலையை மீண்டும் உருவாக்க இடமளிக்க கூடாது. மீண்டும் கிழக்கு மாகாணத்தை குழப்புவதற்கு இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நாங்கள் வடக்கு, கிழக்கு ரீதியாக பரந்துபட்டளவில் கிழக்கு தலைமையை உள்ளடக்கியதாக போட்டியிட்டு வருகின்றோம். எனவே எமது கொள்கையும் வடக்கு, கிழக்கு இணைப்புத்தான் ஆனால் அதனுடன் கூடிய அபிவிருத்தியும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எமது கட்சி குறியாக இருக்கின்றது.

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தேசியம் பேசிப்பேசி எமது மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர். இதனால் முஸ்லிம் தலைவர்களின் ஆதிக்கமும் ஏகாதிபத்திய குணமும் கூடிக்கொண்டு வருகின்றது.

உதாரணமாக அமைச்சர் ஹிஸ்புல்லா வடக்கு, கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும் என நாடாளுமன்றத்தில் பேசுகின்றார், மாறாக ஹக்கிம் பேசுகின்றார் 7 ஆசனங்களைப்பெற்று கிழக்கு மாகாணத்தை ஆட்டிப்படைத்துள்ளோம் என்று.

அதே நேரத்தில் ஹிஸ்புல்லா, ஓட்டமாவடியில் இருந்த இந்து கோயிலை உடைத்து பள்ளிவாசல் கட்டியதாக கூறியிருக்கின்றார்.

இதையெல்லாம் பார்க்கும் போது முஸ்லிம் தலைவர்களின் ஏகாதிபத்தியம் நன்கு புலப்படுகின்றது. இவ்வாறு அவர்கள் ஏகாதிபத்தியத்துடன் பேசுவதற்கும் செயற்படுவதற்கும் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

இவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து கொண்டு இவற்றையெல்லாம் அனுமதித்து, எதிர்த்து குரல் கொடுக்காமல் உள்ளனர்.

இவர்கள், அபிவிருத்தியும் செய்யவில்லை தமிழ் தேசியத்தையும் வெல்லவில்லை எமது மக்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல்கொடுக்க முடியாதென்றால் நாடாளுமன்றத்தில் இருந்து என்ன பிரயோசனம்.

இதேபாணியில்தான் இன்று சிங்கள கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியும் போட்டியிடுகின்றது.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களிப்பதென்பது அமீரலியை பலப்படுத்துவதற்கு அளிக்கும் வாக்காகத்தான் அமையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பது சிங்கள துவேசம் பிடித்த கட்சியாகும் அதில் நானும் பதவி வகித்திருந்தேன், ஆனால் அக்கட்சி சார்பாக ஒருபோதும் நான் வாக்கு கேட்கவில்லை.

ஆகவே இவ்வாறான கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணித்து எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழர் ஐக்கிய முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இத்தேர்தலில் தேசியம் என்ற கதைக்கு இடமில்லை, இதனால் எதிர்காலத்தில் ஒன்றும் நடக்கப் போவதில்லை, யதார்த்தத்தினை கருத்திலெடுத்து காலத்தின் தேவைக்கேற்ப நாங்கள் எமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்கு வழிசமைக்க வேண்டும் இதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் என குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. இங்கு எமக்கு ஒரு பெரிய கேள்வி ஒன்றிருக்கின்றது. தெரிந்தவர்கள் தயவுசெய்து பதிலளிக்கவும். கொலைக்குற்றச்சாட்டப்பட்டு சந்தேகத்தின் பேரில் சிறைவாசம் இருந்துவிட்டு பிணையில் வௌியில் வந்த சந்தேக நபர்களுக்கு உள்ளூராட்சி தேர்தலில் அபேட்சகராக முன்நிற்க தகுதியிருக்கின்றதா? பதிலை எதிர்பார்க்கின்றேன்.

    ReplyDelete
  2. i don't know why this f*** B**d is still living , short him out , i hope it will happen soon.

    ReplyDelete
  3. பிணையில் இருப்பதால் வழக்கு நடந்துகொண்டிருக்கும். குற்றவாளியென்று தீர்ப்பு வரும் வரை அவன் சந்தேக நபர் என்வே தேர்தலில் பங்கு கொள்ளலாம்.

    ReplyDelete
  4. He should be taken to Internal criminal justice court for his roll in Katankudy mosque mass murder.Muslim should collect evidence

    ReplyDelete
  5. ​நன்றி, தேர்தலில் சந்தேக நபர்கள் அபேட்சகர்களாக கலந்து கொள்ளமுடியும் என்ற தேர்தல் சட்டத்தின் இல.குறிப்பிட முடியுமா?

    ReplyDelete
  6. கருணா தமிழினத்தின் துரோகி , மற்றவர்களுக்கு கேட்கவா வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.