Header Ads



தேர்தல் சட்டமூலத்தில் குறைபாடுகள் உண்டு, குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள் - ரணில்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை இதற்கு மேலும் காலம் தாழ்த்த முடியாது. எனவே நீதிமன்றம் செல்லாது தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (09) பாராளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.

உள்ளூராட்சி சபை தேர்தல் சட்டமூலத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, பிரதமர் ஆற்றிய விசேட உரையிலேயே இந்த வேண்டுகோளை முன்வைத்ததர்.

இத்தேர்தல் சட்டமூலத்தில் குறைபாடுகள் உண்டு என தெரியும். முதன்முதலில் கலப்பு முறை தேர்தல் நடத்தப்படும்போது அனைத்து நாடுகளும் இவ்வாறான சூழ்நிலைக்கு முகம் கொடுத்துள்ளன. இதற்காக தேர்தலை ஒத்தி வைப்பது அர்த்தமற்றது என்றும் பிரதமர் கூறினார்.

கட்சித் தலைவர்கள் மாநாட்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலத்திலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள்.இரண்டு வாரத்துக்குள் அதற்கான திருத்தத்தை நாம் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கலாம். எனவே நீதிமன்றம் செல்வதைவிடுத்து திருத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.