Header Ads



விளாசித்தள்ளிய கல்விப் பணிப்பாளர் நிஷாம்

கிழக்குமாகாணத்தில் முஸ்லிம்கள் முதற்பெரும்பான்மையாக இருக்கின்ற நிலையில் அவர்களது அடையாளத்தை பிரதிபலிக்கக்கூடிய ஒரேயொரு நகரான கல்முனையை சிதைக்கவோ அல்லது தட்டிப்பறிக்கவோ எவரும் முனையக்கூடாது என்று கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாம் தெரிவித்தார்.

சாய்ந்தமருதின் பிரபல்யமிக்க பாடசாலையான அல் ஹிலால் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் புலமைப்பரிசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் அதிபர் எம்.எஸ்.எம். பைFஷால்  தலைமையில் பாடசாலையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய நிஷாம், 

ஒவ்வொரு சமூகத்துக்கும் உள்ள அடையாளங்களை அந்தந்த சமூகங்கள் பேணிப்பாதுகாக்க வேண்டும். அவரவரது சமூக அடையாளங்களை யாருக்கும் விட்டுக்கொடுக்கவும் கூடாது இதனை மற்றைய சமூகத்தினர் தட்டிப்பறிக்க முயலவும் கூடாது. கிழக்குமாகாணத்திலே மூன்று இனமக்கள் வாழ்கின்றார்கள் இதில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் சிங்களவர்கள் வாழ்கிறார்கள் தமிழர்கள் வாழ்கிறார்கள் இந்த இனத்துவ அடையாளங்கள் என்பது மத அடையாளங்களுக்கு மேலாக உருவாக்கப்பட்ட ஒரு விடயமாகும்.

கிழக்கில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதாக இப்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது பெரும்பான்மையாக தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மூன்றாவது அடையாளமாக சிங்களவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களவர்களின் இருப்பையும் அவர்களது கலாசார விழுமியங்களையும் அடையாளத்தையும் முழுமையாக பிரதிபலிக்கக்கூடியவாறு அம்பாறை நகரம் திகழ்கிறது. அம்பாறை என்றால் அது சிங்கள மக்களது அடையாளமே எமது கண்முன்னே தோன்றும். மட்டக்களப்பு என்றால் அங்கு தமிழர்களின் அடையாளமும் கலாச்சார விழுமியங்களுமே எம் கண்முன்னே வரும் இவைகள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். இவைகள் அவர்களது தனித்துவத்தை இழக்காது இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. திருகோணமலை தமிழர்களுடைய இன்னுமொரு அடையாளமாக இருந்துகொண்டிருக்கின்றது. இங்கெல்லாம் ஏனைய மக்களும் இருந்தாலும்கூட அவைகள் தமிழர்களின் தலைநகர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு என நீண்ட காலமாக அடையாளப்படுத்தப்படும் இடம் என்றால் அது கல்முனை மட்டும்தான். கிழக்குமாகாணத்திலே முஸ்லிம்கள் வாழ்வதற்கான ஒரேயொரு அடையாம் என்றால் அது கல்முனை மட்டும்தான். அதனை யாரும் பறித்துக்கொள்ளக் கூடாது. ஏனைய சமூகங்களுக்கு அவர்களது அடையாளங்களை பிரதிபலிக்கக்கூடிய பிராந்தியங்கள் பல இருக்கின்றபோது கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கின்ற முஸ்லிம்களின் அடையாளமாக கல்முனை இருப்பதில் எந்தத்தவறும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அந்த அடையாளத்தை பாதுகாப்பதற்கு சாய்ந்தமருது தடையாக இருக்கின்றது என்ற உதாரணம் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதில் கேள்விகள் இருக்கின்றன. எனவே அடையாளத்தை உறுதிப்படுத்த நினைக்கின்றவர்களும் ஏனையவர்களும் புரிந்த்துனர்வுடன் செயற்பாட்டால் முட்டிமோதவேண்டிய தேவை இருக்காது என்றும் தெரிவித்தார்.

முக்கியமான தெளிவுகள் மக்களுக்குச் செல்லவில்லை என்றால் அதற்கு பிரதான காரணம் இங்கு கல்வி சரியானமுறையில் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்றே கூறவேண்டியுள்ளதாகவும் எனவே கல்வி என்பது வெறும் பரிட்சையை மட்டும் முன்னிலைப் படுத்தியதாக அமையக்கூடாது என்றும் தெரிவித்தார். சாய்ந்தமருது மக்கள் அவர்களது எதிர்பார்ப்புக்களை அடைவதற்காய் தற்போது வீதிக்கு இறங்கியுள்ளார்கள். இது சிறந்ததொரு மாற்றம் இவ்வாறான மாற்றங்கள் ஒவ்வொரு விடயத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

ஒரு சமூகத்தின் அடையாளம் என்பது எப்போதும் இழக்கப்பட முடியாத ஒன்றாக இருக்கின்றது. அந்த அடையாளத்தை அந்த இனம் அல்லது அந்த மதம் அல்லது சமூகம் இழக்கின்றதோ அல்லது விட்டுக்கொடுக்கின்றதோ அப்போது அந்த சமூகம் வலுவிழக்க காரணமாக அது அமைந்து விடுகிறது.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுடைய கலைகலாச்சார நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் சிங்கள கலாச்சாரத்தையோ அல்லது அங்கில தமிழ் கலாச்சார நிகழ்வுகளையோ அரங்கேற்றும்போது அவைகளில் முஸ்லிம் கலாச்சார உடைகளை அணிந்து அவ்வாறான நிகழ்வுகளை வடிவமைக்கும்போது அங்கு இஸ்லாமிய கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதுடன் ஏனைய கலாச்சாரங்களை பின்பற்றுவோரிடமிருக்கும் சில தவாறான புரிதல்கள் இல்லாமல் ஆவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துடன் சகோதர உணர்வுகளை கட்டியெழுப்புவதாகவிருந்தால் அந்தந்த சமூகங்கள் தங்கள் தங்களுடைய சமூக அடையாளங்களை மறந்து விடாமல் தான் தான் சார்ந்த சமூக அடையாளங்களை வெளிப்படுத்திக்கொண்டு நாங்கள் இணையவேண்டிய தேவை இருப்பதாகவும் இவ்வாறான செயற்பாடுகளை சிறு வயது மானவர்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கான நிகழ்வுகளை வடிவமைக்கும்போது ஏனைய சமூகங்களுக்குரிய கலாச்சார நிகழ்வுகளைத் தவிர்த்து இஸ்லாமிய விழுமியங்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளை இணைத்துக்கொள்வோமானால் அது அவர்களது வாழ்வில் மட்டுமல்ல இன அடையாளத்தை பேணக்கூடிய சமூகத்தை உருவாக்க உதவும் என்றும் தெரிவித்தார். இவைகளை ஏன் சாய்ந்தமருதில் கூறுகின்றேன் என்றால் இந்த ஊர் இப்போது ஒரு புதிய வழிமுறையை பின்பற்ற தொடங்கியுள்ளது இவர்களது நிலைப்பாடு சரியா பிழையா என்ற கருத்துக்களுக்கு அப்பால் அவர்களுடைய உரிமைக்காக போராடுகின்ற ஒருங்கிணைந்த உள்ளத்தை வெளிப்படுத்திய ஒரு ஊர் என்பது மட்டுமல்ல முஸ்லிம்களின் அடையாளத்தை 100% இதுவரை காலமும் வெளிப்படுத்திய ஊர். ஏனைய ஊர்களில் கலப்பிருக்கும் ஆனால் சாய்ந்தமருதில் இல்லை.  எனவே தான் முஸ்லிம்களின் அடையாளத்தைப் பாதுகாக்கின்ற பொறுப்பு 100% முஸ்லிம்களைக் கொண்ட சாய்ந்தமருதிளிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்வித்துறை என்பது சாதாரணமாக புத்தகத்தைப் படித்துக்கொண்டு புத்தகத்திலிருப்பதை பரிட்சையில் எழுதுவதுடன் நின்றுவிடக்கூடாது. இவ்வாறான கலாச்சாரத்திலிருந்து நாங்கள் விடுபடவேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். நீண்ட காலமாக கல்விக்கும் அரசியலுக்கும் கல்விக்கும் சமுதாய ஒழுங்குக்கும் கல்விக்கும் பண்பாட்டுக்கும் கலவிக்கும் சமயத்துக்கும் கல்விக்கும் வாழ்க்கை முறைக்கும் எவ்வித சம்மந்தமுமில்லாத பயணத்தை நாம் மேற்கொண்டிருக்கிறோம்.இவ்வாறான வழிமுறைகள் மாற்றியமைக்கப்படவேண்டும் முகம்மது நபி (ஸல்) அவர்கள் மிகவும் முக்கியமான ஒருவராக அடையாளப்படுத்தப் பட்டிருந்ததற்கு காரணம் அவர் வாழ்வியலிலும் ஆன்மீகத்திலும் நேர்மையானவராகவும் எந்தத் தவறிழைக்காதவராகவும் இரண்டுக்குமே வித்தியாசத்தை பேனாததுமான ஒரு வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டதன் காரணமாகத்தான் அவர் உலகின் முக்கியமானவர்களால் மிக முக்கியமானவர் என்று அடையாளப்படுத்தப் பட்டுள்ளார்.

முகம்மது நபி (ஸல்) அவர்களுக்குரிய அடையாளம் என்பது மிக முக்கியமானது. எல்லா கவிஞர்களுடைய எழுத்துக்கள் மற்றவர்களுடைய கருத்துக்கள் போன்ற விஷயங்களை எல்லாம் பார்த்தோமோயானால்  சாதாரண மனித வாழ்வோடு தொடர்பான ஒருசில வரையறை செய்யப்பட்ட விடயங்களுக்கு உதாரணத்துக்கு எடுக்கப்படும்போது முகம்மது நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறை எடுக்கப்படுவதில்லை. இவற்றை வரலாற்று ரீதியாக ஆராய்ந்தால் புரியும். ஆனால் முழுமை பெற்ற ஆய்விகளின்போது அவரது பெயர் முன்னிலைப்படுத்தப் படுகின்றது. இதுதான் அன்னவர்கள் ஆன்மீகத்திலும் லவ்ஹிகத்திலும் ஒருன்கினைன்தவர் என்று காட்டி நிற்கின்றது. அப்படிப்பட்ட சிறந்த முன்மாதரிகளைக் கொண்ட சமூகத்தில் வாழும் நாங்கள் அரசியலில் இருந்து கல்வியைப் பிரித்துள்ளோம் கல்வியில் இருந்து வாழ்வியலைப் பிரித்துள்ளோம் கல்வியில் இருந்து ஆன்மீகத்தைப் பிரித்துள்ளோம் கல்வியில் இருந்து எமது சமூக நடத்தைப் பாங்கினையும் இரண்டாக பிரித்துப்பார்க்கின்ற ஒரு சமுதாயமாக மாற்றமடைந்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

பாடசாலைகளின் பணி ஒரு மாணவனின் கல்வி நடவடிக்கையாக மட்டுமிருந்தால் பெரும்பாலான பாடசாலைகள் இன்று மூடப்பட்டிருக்க வேண்டும் அந்த பொறிமுறையில் பல பாடசாலைகள் தோல்வியடைந்துள்ளன.அது மறுக்கமுடியாத உண்மை.கல்வி மட்டும்தான் இலக்கு என்றால் அந்த பரீட்சையில் அவர்கள் 100% சித்தியடைய வேண்டும். சித்தியடையாமல் வீதம் கூடுகின்றபோது பாடசாலைகள் மூடப்படுதல் வேண்டும். பாடசாலைகள், மாணவர்கள் பரிட்சைகளில் மட்டும் சித்தியடைவதற்கான இடம் மட்டுமல்ல பாடசாலைகள் என்பது வாழ்வியலையும் சமயத்தையும் கற்றுக்கொடுக்கின்ற இடம். பாடசாலை என்பது அரசியலும் சமூகவியலும் எவ்வாறு பின்னிப்பிணைந்து இருக்கின்றது என்பதைக் கற்றுக்கொடுக்கின்ற இடம் பாடசாலை என்பது ஒரு கணவனும் மனைவியும் எவ்வாறு வாழ்வது தங்களது பிள்ளைகளை எவ்வாறு வழிப்படுத்துவது என்று கற்றுக்கொடுக்கின்ற இடம். அந்த அம்சங்களை நாங்கள் இல்லாமல் செய்ததனால் தான் சில விடயங்களை புரிந்து கொள்ளாததால் தான் இன்று சமூகங்கள் ஒன்றையொன்று சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும் இந்த தத்துவார்த்தங்களை புரிந்து கொள்ளாதனால் தான் சமூகங்களுக்கு இடையேயும் ஊர்களுக்கு இடையேயும் ஒருவரையொருவர் சந்தேகக்கண் கொண்டு பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு தாய்க்கு நான்கு பிள்ளைகள் பிறக்கின்றன அதில் ஒரு பிள்ளை திருமணம் முடித்து வேறு குடித்தனம் போக நினைக்கின்றது அதில் என்ன தவறு இருக்கின்றது என கேள்விஎழுப்பினார். அதற்காக இந்தப்பிள்ளை தாய் தந்தையுடன் உறவை அறுத்துக்கொண்டு போகிறது என கருதக்கூடாது. சாய்ந்தமருதுடைய போராட்டமும் அப்படிப்பட்டதாக இருப்பதாக தான் நினைப்பதாகவும் தெரிவித்தார். தனிவீடு அமைப்பது என்பது அல்லது தனிக்குடித்தனம் அமைப்பது என்பது தொப்புள்கொடி உறவை நிரந்தரமாக அறுத்துக்கொள்ளும் ஒரு நிகழ்வல்ல என்றும் தனிக்குடித்தனம் சென்றுவிட்டால் எல்லாம் குழம்பிவிடும் என்று எண்ணக்கூடாது என்றும் தெரிவித்தார்.
.
கல்வியை அடிப்படையாக வைத்து ஒரு பிரதேசத்தின் அடையாளம் தீர்மானிக்கப்படுமானால் முதன்முதலில் முஸ்லிம்களின் அடையாளத்தை இழக்கின்ற பிரதேசமாக கல்முனை தான் திகழும் என்பதை மிகுந்த கவலையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றும்  இவ்வாறானதொரு சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே கடந்த 2010 ஆம் ஆண்டு ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்ததாகவும் அதனூடாக கல்முனை கல்வி மாவட்டம் உருவானதாகவும் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் கல்முனை வலையம் எல்லா சமூகத்தினராலும் அங்கீகரிக்கப்பட்ட பரிட்சைகளை நடத்துகின்ற வலையமாக இருந்ததாகவும் இப்போது அதை கல்முனை வலையம் கைநழுவ விட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதனை மீளப்பெறுவதற்கான தகைமையை இப்போதுள்ள கல்வி நிலையங்கள் பெற முயச்சிக்கவில்லை என்றும்  கவலையுடன் தெரிவித்தார். அதேநேரம் பரிட்சை முடிவுகளில் மேலோங்கியுள்ள ஒரு வலையம் அதனை கையில் வைத்திருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வியெழுபினார். இவ்வாறான வீழ்ச்சிக்கு இப்பிரதேசத்தில் இருக்கின்ற அதிபர்களும் ஆசிரியர்களும் தான் காரணம் என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாகவும் இதனை இவர்கள் மீள்பரிசிலனை செய்யவேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக இவர்கள் உளச்சுததியுடன் செயற்பட வேண்டும் என்றும் முடியாதவிடத்து இவர்களை இப்பிராந்தியத்தை விட்டு மாற்ற வேண்டிய தேவை ஏற்படும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார்.

கல்வியின் ஊடாக முன்னேற்றம் காணவேண்டிய இப்பிராந்தியத்தின் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கின்ற அதிபர்களையும் ஆசிரியர்களையும் இங்கு வைத்துக்கொண்டு அழகுபார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார். பிரதேசத்தின் வீழ்ந்துள்ள கல்வி நிலையை முன்னேற்றுவதற்காய் விரைந்து செயற்பட்டு கல்முனைப் பிரதேசத்தின் சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தை முன்னணி கோட்டமாக முன்கொண்டுவருமாறு அறைகூவல் விடுத்தார்.

கிழக்குமாகாணத்தின் முன்னணி கோட்டமாக சாய்ந்தமருதை மாற்றுங்கள் உதவிகள் உங்கள் காலடிகளுக்கே வந்துசேரும் என்றும் தெரிவித்தார். ஒரு பிரதேசத்தின் இருப்பு என்பது ஏதோவொரு விடயமூடாக நிலைநாட்டப்படவேண்டும். அந்த வகையில் கல்வியூடாக இப்பிராந்தியத்தின் அடையாளத்தை நிலைநிறுத்த முன்வாருங்கள் அதற்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை சாய்ந்தமருதில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள துரோகிகள் என்ற பட்டியலில் இட்டு ஓரங்கட்டுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

சமூக ஒற்றுமையின் அவசியம் பற்றி கருத்துத் தெரிவித்தபோது அண்மையில் சகோதர சமூக அரசியல்வாதிகளிடையே ஏற்பட்ட பின்னடைவையும் அதனை நிவர்த்திக்க அந்த சமூகத்தின் பிரதிநிதிகள் முன்னெடுக்கும் முயச்சியையும் உதாரணம் காட்டியதுடன் ஒற்றுமையின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.

நிகழ்வின்போது பிரதம அதிதி கௌரவ மற்றும் விஷேட அதிதிகள், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க அங்கத்தினர்கள் அவர்கள் ஆற்றிய சேவைகளுக்காக பாடசாலையால் கௌரவிக்கப்பட்டனர்.

-Ameer-

No comments

Powered by Blogger.