Header Ads



‘ட்ரம்ப்பால் சிலுவை யுத்தம் ஏற்படும்’ - சம்பிக்க

“அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிலுவை யுத்தத்துக்கு வழி வகுத்துள்ளார்” என, மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு,வெளிநாட்டு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் பகுப்பாய்வு தொடர்பில், தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“விசேடமாக இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசேலத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அமெரிக்காவின் தூதரகத்தை ஜெருசலேத்தில் அமைக்கவும் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமையவே, ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

“எனினும், இதற்கு கத்தோலிக்கர்களின் பிரதானியான போப்பாண்டவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். யூதர்களின் கைகளுக்கு ஜெருசலேத்தின் ஆட்சி அதிகாரம் சென்றால் கத்தோலிக்கர்களின் பிரச்சினையை எதிர்கொள்வர் என்பதே போப்பாண்டவரின் எண்ணம். இந்த விடயத்தால் பல குழப்ப நிலைகள் உருவாகியுள்ளது. ஒரு பக்கம் இஸ்லாம் நாடுகள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. இலங்கையின் No one இனவெறியன் சொல்லவந்திட்டாரு கருத்து.

    ReplyDelete

Powered by Blogger.