Header Ads



ஐ.தே.க. க்கு எதிரான தரப்புக்களை வலுப்படுத்த, காய் நகர்த்தும் மைத்திரி

இந்த மாதம் 30ம் திகதியின் பின்னர் எவரும் எதிர்பார்க்காத பாரிய அரசியல் மாற்றமென்று இடம்பெறும் என ஞாயிறு அச்சு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எவரும் எதிர்பார்க்காத பாரியளவிலான அரசியல் மாற்றமொன்று நாட்டில் இடம்பெறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான தரப்புக்களை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த நாட்டையும் உள்ளடக்கக்கூடிய வகையிலான ஜனாதிபதியின் தலைமயில் விவசாய திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

எனினும், 2020ம் ஆண்டு வரையில் இந்த கூட்டணி அரசாங்கத்தை அசைச்ச முடியாது என ஜனாதிபதியும் பிரதமரும் அடிக்கடி மேடைகளில் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.