Header Ads



ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு, நிரந்தரமான தீர்வொன்றினை பெற்றுத்தரவேண்டும்

ஒலுவில் மண்ணரிப்பு பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை பெற்றுத்தரவேண்டும் என்று சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசீம் அவர்கள் ஜனாதிபதியிடம் இன்று எழுத்துமூலம் கேட்டுக்கொண்டார்.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதனைத்தொடர்ந்து  துறைமுக வாயிலில் மண்மீது உருவாகுவதும்.ஒலுவில் உட்பட துறைமுகத்துக்கு வடபுறமாக உள்ள ஊர்களில் தீவரமான கடலரிப்பினால் கடல்நீர் கிராமங்களில் உட்புகுந்து,கட்டிடங்கள்,கலங்கரை விளக்கு,வயல்கள்,தென்னந்தோப்புக்கள் உட்பட இன்னும் பல கரையோரத்தில் அமைந்துள்ள பௌதீக வளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
இந்தப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்குமென பலராலும் பலமுயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.இருந்திட்டபோதிலும் தற்காலிகமான சில தீர்வுகளை தவிர நிரந்தரமாக எதுவித தீர்வுகளும் இதுவரை எட்டப்படவில்லை.

அண்மையில் பொலன்னறுவையில் நடைபெற்ற ஒரு நிகழ்விலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இப்பிரச்சினையை பிரதியமைச்சர் பைசல் காசீம் அவர்கள் பிரஸ்தாபித்தவேளை இதுசம்மந்தமாக  எழுத்துமூல அறிக்கையொன்றினை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இதற்கேற்ப. இன்று புதன்கிழமை 20 ஆம்திகதி   கொழும்பிலே புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் தாதிய பீடத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு கடலரிப்பினால் ஏற்பட்டுள்ள சேதங்களும்,அதற்கான சில பரிகாரங்களையும்  உள்ளடக்கிய அறிக்கை ஒன்றினை பிரதியமைச்சர் கையளித்ததோடு.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தென்கிழக்கு மக்கள் மகிந்த ராஜவை எதிர்த்து தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதியுபகாரமாக இதனை செய்ய வேண்டும் என வேண்டிக்கொண்டார்.

1 comment:

  1. Election Propaganda, Nothing will happen as usual?

    ReplyDelete

Powered by Blogger.