Header Ads



கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம், மனக்கசப்பு ஆரம்பம் - வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது திண்டாட்டம்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிப்பதில், அரசியல் கட்சிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் காரணமாக, பெரும்பாலான வேட்பாளர்கள், வேட்புமனுக்கள் கிடைத்தாத நிலையில், கட்சியை விட்டு வெளியேறுவது அல்லது சு​யேட்சையாகக் களமிறங்குவதென்றத் தீர்மானங்களுக்கு வந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிரணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற பிரதான கட்சிகளே, இவ்வாறான பிரச்சினைக்கு பாரியளவில் முகங்கொடுத்துள்ளன.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியரைத் தயாரிக்கும் போது, ​வரையறுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாகவே பலர் ​வேட்பாளர்களாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அவ்வனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்க முடியாத நிலைமையில், அரசியல் கட்சிகள் சிக்கியுள்ளன.

பிரதான அரசியல் கட்சிகள் பலவும், தனித்தும் கூட்டணியாகவும் தேர்தலில் போட்டி​யிடுவதென்றத் தீர்மானத்துக்கு வந்துள்ளனர். இதனால், அக்கட்சிகளுடன் சிறு சிறு கட்சிகளும் கூட்டணிச் சேர்ந்துள்ளன. இதனால், அந்த அனைத்துக் கட்சிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்குவதிலேயே, இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.

தங்களது கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறக்குவதாக, பிரதான கட்சிகள் சில அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது, தற்போது திண்டாடிக்கொண்டிருப்பதாகத் தெரியவருகிறது.

கூட்டணியாகப் போட்டியிட முன்வந்துள்ள அரசியல் கட்சிகள், தங்களது பிரதான கட்சிகளுக்கே அதிக கோட்டாக்களை ஒதுக்கிக்கொள்ள எத்தணிக்க்கின்றன. இதனாலேயே, இப்பிரச்சினை உக்கிரமெடுத்துள்ளது.

2 comments:

  1. மிகவிரைவில் இலங்கையில் குடிமகனைவிட கட்சிகள் அதிமாகிவிடும்!

    ReplyDelete
  2. Hopeless country.paksa paksa.

    ReplyDelete

Powered by Blogger.