Header Ads



நமது பராம்பரிய, வரலாற்றை மறந்துவிடக்கூடாது - குமார் சங்ககாரா


இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்ககாரா நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிக்கு நான் பெரிய ரசிகன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

டி20 தொடருக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு உள்ளதால், டெஸ்ட் தொடருக்கான எதிர்பார்ப்பு பெரிதும் குறையத் துவங்கியுள்ளது.

இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், நான்கு நாட்கள் கொண்ட தொடராக மாற்றியமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இதற்கு ஐசிசியும் ஒப்புதல் வழங்கியுள்ளதால், தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான தொடரில் இது பரிசோதனை செய்யப்படவுள்ளது.

ஆனால் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்தியாவுட்டபட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா, டெஸ்ட் போட்டி நான்கு நாட்கள் மட்டுமே கொண்டது என்றால், ஆஷஸ் தொடரை கற்பனை செய்து பாருங்கள். நான்கு நாட்கள் கொண்ட போட்டியின்போது மழை குறுக்கீட்டால் பாதிப்பு எற்படும்.

இப்படி மாற்றப்படுவதன் மூலம் வணிக ரீதியிலான திறன் மற்றும் பொருளாதாரம் குறித்து புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக நமது பராம்பரியம் மற்றும் வரலாற்றை மறந்துவிடக்கூடாது, அதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ரசிகர்கள் நேரத்தை அதிகரிக்கவிரும்பவில்லை தான், அவர்களுக்காகவே இது நடைபெற்றாலும், நான் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளுக்கு பெரிய ரசிகன் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2 comments:

  1. For current srilanka team, 3 days are more than enough to lose the match.

    ReplyDelete
    Replies
    1. but current SL team beat Pak 2-0.
      So how many days pak team needs to lose a test?

      Delete

Powered by Blogger.