Header Ads



முஸ்லிம்களை இன அழிப்பு செய்தவன், நீதிமன்றில் தற்கொலை - சர்வதேச நீதிமன்றத்தில் பரபரப்பு (வீடியோ)


பொஸ்னியப் போரில் இன இழிப்புக் குற்றச்சாட்டுக்கு இலக்காகி, சர்வதேச நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பொஸ்னிய இராணுவத் தளபதி, தீர்ப்பு வாசிக்கப்படவிருந்த சமயத்தில் நீதிமன்றில் வைத்தே நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெதர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொஸ்னியாவில் வாழ்ந்து வந்த முஸ்லிம்களை, 1990களில் நாட்டை விட்டு விரட்டியும் கொலை செய்தும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஸ்லோபொதான் ப்ரல்ஜாக் என்ற பொஸ்னிய இராணுவ முன்னாள் தளபதி உட்பட, க்ரோஷியாவைச் சேர்ந்த ஐந்து அரசியல்வாதிகளுக்கும் 20 ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஸ்லோபொதான் மேன்முறையீடு செய்திருந்தார். அதன் மீதான விசாரணைகள் நிறைவுற்ற நிலையில், அவர் குற்றவாளி என்பது மீண்டும் நிரூபணமானது. இதையடுத்து அவர் மீதான தீர்ப்பு வாசிக்கப்படவிருந்தது.

அப்போது திடீரெனப் பேச ஆரம்பித்த ஸ்லோபொதான், தாம் நிரபராதி என்றும் இன அழிப்பில் ஈடுபடவில்லை என்றும் தாம் ஒரு போர்க் குற்றவாளி அல்ல என்றும் கூறியதுடன், கையில் வைத்திருந்த சிறு குப்பியில் இருந்த கருமையான திரவத்தை அருந்தினார்.

பிரதம நீதிபதி இதைக் கண்ணுற்றபோதும் சந்தேகம் ஏதும் எழாமையால் அவர் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார். ஒரு சில நொடிகளுக்குள், ஸ்லோபொதான் நிலைகுலைந்து சரிந்து கீழே விழுந்தார்.

இதையடுத்து ஸ்லோபொதானின் சட்டத்தரணி “எனது சாட்சிக்காரர் விஷமருந்திவிட்டார்” எனக் கூச்சலிட்டார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பலன் தராத நிலையில் அவர் உயிரிழந்தார்.

3 comments:

  1. (இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
    (அல்குர்ஆன் : 2:85)

    ReplyDelete
  2. Hasbunallah iraivan pidiy miha kadumayanatu

    ReplyDelete
  3. அன்று ஆயுத பலமும் ஆட்பலமும் இருந்தது ஈவ் இரக்கமின்றி வயோதிபர் என்றும் பச்சிலம் குழந்தை பெண்னென்றும் கொண்டு குவித்தான். இன்று எதற்கும் திராணி அற்றவனாக தன் கைகளாலேயே தன் வாழ்வை முடித்து கொண்டான்.

    ReplyDelete

Powered by Blogger.