Header Ads



கோத்தாவின் கைதை, நிறுத்தியது மைத்திரிதான் - உறுதிப்படுத்தியது ராவய


முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்யும் திட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே இடைநிறுத்தினார் என்று ‘ராவய’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கோத்தாபய ராஜபக்சவை கடந்த 22ஆம் நாள் கைது செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அம்பாந்தோட்டையில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைப்பதற்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக கோத்தாபய ராஜபக்சவைக் கைது செய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்திருந்தது.
கோத்தாபய ராஜபக்ச கைது செய்யப்படவுள்ள தகவலை அறிந்த பௌத்த பிக்குகள் குழுவொன்று, 21ஆம் நாள் இரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்தது.
இதையடுத்தே, கோத்தாபய ராஜபக்சவை கைது செய்யும் திட்டம் கைவிடப்பட்டது என்று ராவய செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.