Header Ads



பிரசித்திபெற்ற ஸலபி அறிஞர், உம்ராவை நிறைவேற்றச் செல்லும் வழியில் விபத்தில் வபாத்


முஜத்திதுஸ் ஸுன்னா அல்லாமா அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சிரேஷ்ட மாணவரும் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளரும் தூய ஸலபி சிந்தனையாளருமான அல்லாமா முஹம்மது மூஸா ஆலு நஸ்ர் அவர்கள் உம்ரா கடமையை நிறைவேற்றச் செல்லும் வழியில் சஊதி அரேபியாவின் "தபூக்" பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமது 63 வது வயதினில் நேற்று (26/11/2017) வபாத்தானார்கள்.

அல்லாமா முஹம்மது மூஸா ஆலு நஸ்ர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 1954 ம் ஆண்டு பாலஸ்தீனில் பிறந்து ஜோர்தானில் வசித்து வந்தார்கள், அவர் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று பிறகு பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் லாகூர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய அறிவியல் மற்றும் அரபு மொழியில் தமது மேற் படிப்பைத் தொடர்ந்தார்கள், சூடானில் கலாநிதிப் பட்டம் பெற்று பின் ஜோர்தானின் தனியார் பல்பலைகழகமொன்றில் உதவிப் பேராசிரியராக கடமை புரிந்தார்கள்.

அல்லாமா அல்பானி ரஹிமஹுல்லாஹ், அல்லாமா பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் போன்றோர் குர்ஆனியக் கலைகளில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமையை பல சந்தர்ப்பங்களில் பாராட்டியுமுள்ளனர்.

அவர்கள் எழுதிய அற்புதமான பல புத்தகங்களில் சில..

‎1- إتحاف الإلف في فوائد الألف والنيف من سورة يوسف-. بالمشاركة (مطبوع)
‎2- إتحاف السامع بشرح النظم الجامع.(مخطوط)
‎3- أثر القرآن في صلاح المجتمع – تحقيق وتعليق .(مطبوع)
‎4- اختيارات أبي حاتم السجستاني (مخطوط)
‎5- اختيارات الإمام ابن خالويه .(مخطوط)
‎6- اختيارات الإمام ابي عبيد القاسم بن سلام ومنهجه في القراءة-(رسالة دكتوراة).(مخطوط).
‎7- اختيارات الإمام مكي بن أبي طالب القيسي .(مخطوط)
‎8- اختيارات الإمام الهذلي (مخطوط).
‎9- البحث والاستقراء في بدع القراء.(مطبوع)
‎10- البدايات لمريد علم القراءات (مخطوط).
‎11- البراهين الواضحة في فضائل وأحكام سورة الفاتحة .(مخطوط) .
‎12- جزء في تكبيرات الختم عند القراء.(مخطوط).
‎13- جزءفي حكم القراءة من المصحف في الصلاة والرد على المجوزين.(مخطوط).
‎14- الدر النثير في اختصار ابن كثير .(مطبوع ).
‎15- الردود والتعقبات على الإمام ابن جرير الطبري لمفاضلته بين متواتر القراءات .(مخطوط).
‎16- الروض الباسم في رواية شعبة عن عاصم .(مطبوع).
‎17- سلسلة كنوز غاية النهاية في تراجم القراء لابن الجوزي ,وتقع في نحو عشرين رسالة بين صغير وكبير.(تحت الطبع).
‎18- شرح رسالة شعبة للهجرسي القعقاعي .(مطبوع).
‎19- فضائل القرآن وحملته في السنة المطهرة .(مطبوع).
‎20- القول المفيد في وجوب التجويد (مطبوع).
‎21- المختار في توجيه قراءات أئمة الأمصار.(مخطوط).
‎22- المزهر في شرح الشاطبية والدرة – مع مجموعة من زملائه في كلية الدعوة وأصول الدين .(مطبوع).
‎23- مقدمة في أصول التفسير ومناهج المفسرين.(مخطوط).
‎24- أحاديث القراء رواية ودراية .
‎25- الإضاءة في مدخل إلى القرآن والقراءة.(تحت الطبع)
‎26- شرح منظومة رواية شعبة للهجرسي القعقاعي .(مطبوع).
‎27- قطف الثمر المستطاب في تفسير فاتحة الكتاب .(مطبوع)
‎28- شذى العرف في أحكام الوقف (مطبوع)
‎29- الإستقصاء لاخطاء القراء(مخطوط)
‎30- قارءات الصحابة (مخطوط)
‎31- طرائف القراء (مخطوط)
‎32- نساء قارءات (مخطوط)
‎33- قراء بلاد الشام (مخطوط)
‎34- الإستيعاب في صحيح الأسباب .
‎35- مقدمة في أصول التفسير ومناهج المفسرين (مخطوط)
‎36- صفة تلاوة النبي للقرأن الكريم .

எங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக.

By - Shk TM Mufaris Rashadi.

2 comments:

  1. அல்லாஹ்தஆலா அன்னாரின் பாவங்களை மன்னித்து அன்னாருடைய பணியைக் கபூல் செய்து ஜன்னாதுல் பிர்தவ்ஸ் சுவனத்தில் சேர்த்துவைப்பானாக. அன்னாரைப் போன்ற சிறந்த உலமாக்களையும் அறிஞர்களையும் இந்த உம்மத்துக்கு வழிகாட்ட அனுப்பிவைப்பானாக. ஆமீன்.

    ReplyDelete
  2. إنا لله وإنا إليه راجعون
    .اللهم اغفر له وارحمه وارفع درجته عند المهديين
    அல்லாஹ் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வாஜிபாக்கி வைக்கட்டும்.

    ReplyDelete

Powered by Blogger.