Header Ads



பிரபாகரன் தற்போது இருந்திருந்தால், போரில் வெற்றி பெற்றிருப்பார் - பந்துல

தற்போது பிரபாகரன் இருந்திருந்தால் எந்த ஆயுதங்களையும் பயன்படுத்தாமல், கனிய எண்ணெய் மூலமாகவே போரில் வெற்றி பெற்றிருப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று -07- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்களை சமுத்திரத்தில் நிறுத்தி வைப்பதனால் பிரபாகரன் அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து, யுத்தத்தில் இலகுவாக வெற்றி பெற்றிருப்பார்.

யுத்தம் நடைபெற்ற போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு விடுதலைப் புலிகளால் முடியுமாக இருந்தது

அந்த வகையில் தற்போது யுத்தம் நடைபெற்றிருந்தால் இன்று இலங்கை இருந்திருக்காது. நாம் பிரபாகரனின் அடிமைகளாகி இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தை நடத்துவதற்கு தேவையான அத்தியாவசியப் பொருள் எரிபொருளாகும்.

கடந்த காலத்தில் வடக்கிலிருந்து பிரபாகரனின் வான் படை வந்து கொழும்பில் தாக்குதல் நடத்தும் போது, அத்தியாவசியப் பொருளான எரிபொருள் இல்லை என்றால் என்னவாகும்?

அதற்கான முன்னேற்பாடுகளை மஹிந்த அரசாங்கம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

அப்போதைய காலகட்டத்தில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் நாம் யுத்தத்தில் தோற்றுப் போய் இருப்போம், பிரபாகரனே நாட்டை ஆண்டிருப்பார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

4 comments:

  1. New statment and RACISM TALKS

    ReplyDelete
  2. இந்தக் கருத்தைத் தெரிவிக்கும் ஆசாமிக்கு அவசரமான சிகிச் சை தேவை.

    ReplyDelete
  3. இந்த மாதிரியான தோதுகளும் நம்ம பாராளமன்றதில இரிகாங்க..!?

    ReplyDelete
  4. ஆஹா!
    என்ன புதுமை. இந்த மனிசன புதிய கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் உள்ளடக்க வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.