Header Ads



ஓடும் ரயிலை திசைதிருப்ப, மாணவன் முயற்சி - பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

தலை­மன்­னா­ரி­லி­ருந்து கொழும்பு நோக்கி பய­ணித்த தபால் சேவை ரயிலை திசை திருப்பி அபா­யத்தை ஏற்­ப­டுத்த முயற்­சித்தார் என்ற சந்­தே­கத்தில் பிர­பல பாட­சாலை ஒன்றின் மாணவன் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்றின் உத்­த­ர­வுக்கு அமைய விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் பேசாலை பகு­தியில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்­றுள்­ளது.

இந்தச் சம்­ப­வம்­பற்றி மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, 

தலை­மன்னார் பிய­ரி­லி­ருந்து இரவு கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் இரவு 9.45 க்கு பேசாலை ரயில்வே நிலை­யத்தை வந்­த­டைந்­தது.

ரயில் ஓடும் சரி­யான பாதையை இணைக்க முடி­யாத நிலையில், அதனைச் சீர­மைக்க ரயில்வே அதிகாரிகள் முயற்­சித்­தனர்.

இருப்­பினும் அது பய­ன­ளிக்­கா­த­மையால், ரயில்வே அதி­கா­ரிகள் ரயில்வே நிலை­யத்­தி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்­தி­லுள்ள தண்­டா­வா­ளங்­களை இணைக்கும் இடத்­துக்குச் சென்று பார்த்­த­போது தண்­டா­வா­ளங்­களை இணைக்கும் இடை­வெ­ளியில் இரு பாறாங்­கற்­களை வைத்து இரு பாதை­களை இணைக்க முடி­யா­த­படி செய்­யப்­பட்­டி­ருந்­தமை கண்­டுப்­பி­டிக்­கப்­பட்­டது.

இது விட­ய­மாக பேசாலை ரயில்வே அதி­காரி பேசாலை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­த­தனைத் தொடர்ந்து, பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.ஆர்.சிறில் தலை­மையில் பொலிஸார் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­துக்குச் சென்று புலன் விசா­ர­ணையில் ஈடு­பட்­டனர். அதன் போதே குறித்த மாண­வனே இவ்­வாறு செய்­துள்­ளமை தெரிய வந்­துள்­ளது.

இச் சம்­பவம் மாண­வர்­க­ளி­டை­யி­லான விளை­யாட்டு சம்­ப­வ­மாக இர­வு­வே­ளையில் நடாத்­தப்­பட்­ட­தாக தெரிய வந்த போதும் இது கண்டு பிடிக்­கா­தி­ருந்தால் பெரும் அபா­யத்தை தோற்­று­வித்­தி­ருக்கும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது. இச் சம்­ப­வத்தால் அன்று ரயில் தாம­தித்தே புறப்­பட்­டதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இச்­சம்­பவம் தொடர்­பாக சந்­தே­கத்தில் மாணவர் ஒருவர் கைது செய்­யப்­பட்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது மாணவனை எதிர்வரும் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஸ் 

No comments

Powered by Blogger.