Header Ads



"இலங்கை அணியின் நிலைமை"

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வியுற்று வொயிட் வாஷ் ஆகியிருக்கிறது இலங்கை அணி.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை அணியின் தலைமையை ஏழுமுறை மாற்றியுள்ளது இலங்கை.

ரங்கன ஹேரத், தினேஷ் சண்டிமால், சமரா கபுகெதரா,  மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் உபுல் தரங்கா ஆகியோரை அடுத்து தற்போது திசர பெரேரா அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் மோசமாக தோல்வி அடைந்து தொடரையும் இழந்துள்ளது.

இலங்கை அணிக்கு ஒரே ஆறுதல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது மட்டுமே.

இந்நிலையில் திசர பெரேரா தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இலங்கை, அதனையடுத்து இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

அங்கு மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

3 comments:

  1. பாகிஸ்தான் test தொடரை வென்று, மீண்டு வந்த இலங்கை அணியுடம் போய், T20 தொடருக்கு பாக்கித்தான் போகுமாறு கட்டாயபடுத்தினாரகள்.

    இப்போ, பாக்கிஸ்தான் போகும் உயிர் பயத்தினால் ODI தொடரில் தோற்றுவிட்டார்கள்.

    ReplyDelete
  2. நரி ஊருக்குள்ள வாறதே தப்பு, இதுல சில நரிகள் சகிக்க முடியா வண்ணம் ஊளை விட்டுட்டு வாராது அத விட பெரிய தப்பு.
    இப்படியான நரிகளை அப்படியே விட்டு வைப்பது செய்யும் ஆகப்பெரிய தப்பு.

    பாக்கிஸ்தான் சென்ற இலங்கை அணியின் தாக்குதலுக்கு பின்னால் இருப்பது யார் என்பது உலகறியும். இலங்கைக்கும் அது நன்றாக அறியும், அதனால்தான் அங்கு மீண்டும் செல்வதட்கு இலங்கை சம்மதம் தெரிவித்தது.

    இலங்கையில் உள்ள பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க உதவிய பாகிஸ்தானுக்கு, இலங்கை வீரர்களை பயங்கரவாதத்தாக்குதல் மேட்கொள்வதட்கு என்ன அவசியம் இருக்கிறது?

    பாக்கிஸ்தானுக்குள் வைத்து சில சர்வதேச அணிகளை தாக்குவதன் மூலம் அந்நாட்டு கிரிக்கெட்டை அடியோடு அளிப்பதட்கான தேவ யாருக்கு உள்ளது என்பதை உலகறியும்.

    ReplyDelete
  3. இந்திய காவிகளுக்காக மறைகரமாக இயங்கும் பாசிசபுலிசார் கோழைகள் குறுக்குவழிகளில் திறந்த வீட்டில் நாய் நுழைவது போன்று ஊடுருவி முஸ்லிம்களை வம்புக்கு இழுப்பது கரும்பு சாப்பிடுவதுபோன்று இருக்கிறது. அசலை மாற்ற முடியாதே!

    ReplyDelete

Powered by Blogger.