Header Ads



பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு, உமர் (ரலி) என்ன கூறினார் தெரியுமா..?


ஒரு பெண்....
அதுவும் முஸ்லிம் பெண்...
பன்னாட்டளவில் வணிகம் செய்யலாமா?

ஹின்த் பின் உத்பா (ரலி) உமர் அவர்களிடம் வந்து, “நான் வணிகம் செய்ய விரும்புகிறேன். பண வசதி இல்லை. அரசுக் கருவூலத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் கடன் தந்து உதவுங்கள்” என்றார்.

நம்ம ஊர் ஆசாமிகளாய் இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்?

குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பைத்தான் இஸ்லாம் பெண்கள் மீது சுமத்தியுள்ளது...போய் வீட்டில் கணவனுக்குப் பணிவிடை செய்...என்று அதட்டி அனுப்பியிருப்பார்கள்.

ஆனால் உமர் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அரசுக் கருவூலத்திலிருந்து நான்காயிரம் திர்ஹம் கடனாகத் தருகிறார்.

கடனுதவி பெற்ற பெண் , ‘வணிகம் செய்ய உள்ளூர் மதீனா மார்க்கெட்டே போதும்....ஒரு பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பை ஓட்டலாம்’ என்று நினைத்தாரா? ஊஹூம்.....

சிரியா செல்கிறார்...அதாவது பன்னாட்டு வணிகம்...

வணிகத்தில் ஈடுபடுகிறார்...பெரும் லாபம் ஈட்டுகிறார். வெற்றிகரமான பெண் தொழில் அதிபராக மதீனா திரும்புகிறார். அந்தப் பெண்ணின் வளர்ச்சியைக் கண்டு உமர் மனம் மகிழ்ந்து என்ன கூறினார் தெரியுமா?

“எனக்கு வசதி இருந்திருந்தால் உங்களுக்கு அளித்த கடன் தொகையை உங்களுக்கே நன்கொடையாக அளித்திருப்பேன். ஆனால் அரசுப் பொதுக் கருவூலத்திலிருந்து வழங்கப்பட்ட தொகை. ஆகவே கடனாகத்தான் தர முடிந்தது” என்று கூறி அந்தப் பெண்ணை வரவேற்றார்.

அது மட்டுமல்ல, உடனடியாக உமர்(ரலி) அவர்கள் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டார். “அரசிடமிருந்து கடன் உதவி பெற்று இதுபோல் வணிகம் செய்ய யார் விரும்பினாலும் அவர் என்னிடம் வரட்டும்.”

“யார் விரும்பினாலும்” என்பதில் பெண்களும் உட்படுவர்.

இஸ்லாம் வானளாவிய வாழ்வியல். 

-சிராஜுல்ஹஸன்-

5 comments:

  1. இவருடைய கூற்றுக்குரிய ஆதார நூற்களைத் தந்தால் நன்றாக இருக்கு.

    ReplyDelete
  2. Anything in the name of ISLAM should give proof sources.

    Because Anything in the name of Islam should be spread with proofs. Not to accept blindly saying "very nice"

    So the writer of this article is expected to pass the proof books.

    I welcome the request of Brother Jabarullah.

    ReplyDelete

Powered by Blogger.