Header Ads



நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு, நால்வர் தற்கொலை


-பாறுக் ஷிஹான்-

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த மாதம் கணவர் மரணமடைந்திருந்த நிலையில் கடும் வறுமையில் இருந்த அரியாலை ஏ.வி ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தை   குறித்த   இளம் குடும்பப் பெண்  அழுத்தம் தாங்கமுடியாது தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ளார்.  

30 வயதுடைய டைய குறித்த பெண்  மனரீதியாக கடுமையான தாக்கங்களை எதிர்கொண்ட நிலையில்    தனது பிள்ளைகளான  கிருசாந்து சுநேத்திரா வயது 28 கிருசாந் கருசா-4 சாயித்தி வயது 2 சரவணன் வயது 1 ஆகியோருடன்  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கணவர் தற்காலை செய்துகொண்ட நிலையில் இன்று அவரது குடும்பமே தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தற்போது குறித்த நால்வரது உடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளன.

மேலும்    நண்பர் ஒருவருக்கு  கொடுத்த கடனை திருப்பி தராத காரணத்தால்  கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சலினால் தானும் பிள்ளைகளும் தற்கொலை செய்வதாகவும் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதம் தற்போது இப்பெண் உடமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

9 comments:

  1. இளஞ்செழியன் நாட்டின் சனதிபதி ஆகவேண்டும் அப்போது தான் நாடு முன்னேற்றம் அடயும்

    ReplyDelete
    Replies
    1. பிலால்!
      இது உங்களது மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை. இலங்கைத்தமிழ் அரசியலும் சரி. போராட்டமாயினும் சரி சனங்களை கடித்துக் குதறிவடுவார்கள்.

      Delete
  2. இன மத வேறுபாடு இன்றி வட்டி எனும் கொடுமை மக்களை ஆட்டிப்படைகின்றது .எனவே வட்டியுடனான நுண்கடன் திட்டங்களை தடை செய்து வட்டியில்லா நுண்கடன் திட்டங்களை அறிமுகம் செய்வதட்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் நடவடிக்கை மேட்கொள்ள வேண்டும் .

    ReplyDelete
  3. அவர்களது கஷ்டத்தை ஏதாவது சமூக வளையத்தளத்தில் போட்டு உதவி கேட்டிருக்கலாம், இந்த விடயத்தில் யாரும் இனம் மொழி பார்ப்பதில்லை நிச்சியம் உதவியிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. சாத்தியம் குறைவு, 1கோடிக்கும் அதிக தொகை என தகவல்

      Delete
  4. All of us should find poor people around us and at least try to help in feeding them and their kids to avoid this sad recent not happen any more... while we eat and throw food... we forget to help needy people.. This is shame on us.

    ReplyDelete
    Replies
    1. Mohamed Rasheed
      True
      We have to help the poor people beyond religion
      As Muslims we have more obligation towards others

      Delete
  5. Mr. Rasheed சரியாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. We all all human. Its is our duty to look into our neighbor need also..Very sad.

    ReplyDelete

Powered by Blogger.