Header Ads



எனது கணவனை விடுவிக்க உதவுங்கள் - டன் பிரசாத்தின் மனைவி, முஜீபுர் றஹ்மானிடம் மன்றாட்டம்

-அஸீஸ் நிஷாருதீன்-

ரோஹிங்கியா அகதிகள் மீதான தாக்குதலை அடுத்து கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இனவாதி டேன் பிரியசாத் என்பவனை பிணையின் மூலம் வெளியே வருவதற்கு உதவி செய்யுமாறு அவனது மனைவி பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மானை மன்றாடி கேட்டிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்னர் முஜீபுர் றஹ்மானின் அலுவலகத்திற்கு தனது இரு பிள்ளைகளுடன் வந்த டேன்பிரியசாதின் மனைவி  தனது பிள்ளைகள் தந்தையை நினைத்து இரவில் நித்திரை கொள்ளாமல் இருப்பதாகவும் தனது பிள்ளைகளுக்காக தனது கணவனை பிணையில் வெளியே வருவதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரியிருக்கிறார்.

டேன் பிரியசாத் விடயத்தில் உதவுவதற்கு தான் ஒருபோதும் தயாரில்லை என்று கூறிய முஜீபுர் றஹ்மான், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு ஒன்றுக்கு யாராலும் தலையிட முடியாதென்றும் கூறியதோடு, ஏற்கனவே நிபந்தனை பிணையில் இருக்கும் டேன்பிரியசாத் அளவில்லாமல் அட்டகாசங்களை நிகழ்த்தும் போது அதற்கு அனுசரணை வழங்கி விட்டு இன்று அதற்காக கவலைப் படுவதில் அர்த்தமில்லையென்று கூறியதோடு டேன்பிரியசாதின் இனவாத செயற்பாடுகள் தொடர்பாக கடுமையான விமர்சனத்தையும் அவனது மனைவியிடத்தில் முன்வைத்துள்ளார். 

தனது கணவரை இனவாத பிக்குகள் தவறாக வழி நடாத்தியதாகவும், தனது கணவர் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர்களை யாரும் கவனிப்பதில்லையென்றும், உதவிகளற்ற நிலையில் தானும் தனது பிள்ளைகளும் கஷ்டப்படுவதாகவும் டேன் பிரியசாதின் மனைவி கூறியிருக்கிறார்

ரோஹிங்யா அகதிகள் தாக்குதல் சம்பவத்தின் போது பச்சிளம் பாலகர்களைக் காட்டி 'பயங்கரவாதிகள்' என்று கூறியவன் இந்த டேன் பிரியசாத். மியன்மாரில் முஸ்லிம்கள் கொல்லப்படுவது போல் இலங்கையிலும் கொல்லப்படவேண்டும் கும்மாளமிட்டவன், கல்கிஸ்ஸையில் நிம்மதியாக வாழ்ந்த ரோஹிங்யா அகதிகளை, அவர்களின் பச்சிளம் பாலகர்களை பூஸா மூகாமின் கூண்டுகளுக்குள் தள்ளியவன். இன்று அவனும் தவிர்க்கமுடியாத நிலையில் கூண்டுக்குள் சிக்கியிருக்கிறான்.

6 comments:

  1. அவர்களின் கஷ்டத்திற்கு மனிதன் என்றவகையில் பொருளாதாரரீதியாக உதவி செய்யலாம் அவ்வளவுதான்.

    ReplyDelete
  2. Abdullah i appreciate you

    ReplyDelete
  3. Allah subhanahuwathala Jan change their Ahlaaq with kine of a distance. commendable posting by Abdullah

    ReplyDelete
  4. Thanks Bro .Bilal and jaufer.நாம் எதையும் நடு நிலையாக மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  5. டேய் ராசா ஏன்றா மனைவி மக்களை தவிக்கவிட்டு விட்டு நீர் மட்டும் சிறை மஞ்சனையில் துயில் கொள்கிறாய்.

    ReplyDelete
  6. Yes it is good opportunity to show our generoucity in helping needy people.. can help his family financially if they really in need

    ReplyDelete

Powered by Blogger.