Header Ads



கட்டாரின் நெருக்கடியும், ஹமாஸ் - பதா நெருக்கத்திற்கு காரணமாகியது. “போலி­யான சூட்­சுமம் என்கிறது இஸ்ரேல்

-Hassan Iqbal-

பலஸ்­தீனின் பிர­தான அர­சியல் தரப்­பு­க­ளான ஹமாஸ் மற்றும் பதாஹ் ஆகி­ய­வற்­றுக்­கி­டையில் சுமார் ஒரு தசாப்த காலத்­துக்கும் மேலாக நீடித்து வந்த பகையை முடி­வுக்குக் கொண்­டு­ வரும் வகையில் நேற்­றைய தினம் எகிப்தின் தலை­நகர் கெய்­ரோவில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை முதல் எகிப்தின் மத்­தி­யஸ்­தத்தில் நடை­பெற்று வந்த பேச்­சு­வார்த்­தை­களின் இறு­தி­யி­லேயே நேற்று மாலை இரு தரப்­பி­னரும் இணக்­கப்­பாட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

இதற்­க­மைய 2011 இல் இரு தரப்­பு­க­ளுக்­கு­மி­டையில் செய்து கொள்­ளப்­பட்ட ஒற்­று­மைக்­கான உடன்­ப­டிக்­கையை அமுல்­ப­டுத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

எகிப்­துக்கும் காஸா­வுக்­கு­மி­டை­யி­லான ரபா எல்­லையில் பலஸ்­தீன அதி­கார சபையின் கீழ் வரும் படை­யினர் எதிர்­வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் பாது­காப்புக் கட­மையில் ஈடு­பட இரு தரப்பும் இணங்­கி­யுள்­ள­தாக பேச்­சு­வார்த்­தையில் பதாஹ் தரப்­புக்கு தலைமை வகித்த அஸ்­ஸலாம் அல் அஹமத் தெரி­வித்­துள்ளார்.

பலஸ்­தீனின் கனவை வெற்றி கொள்­வ­தற்கும் அதன் இறை­மையைப் பாது­காத்து ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பகு­தி­களை விடு­விப்­ப­தற்கும் சுதந்­தி­ர­மான இறை­மை­யுள்ள கிழக்கும் ஜெரூ­ச­லத்தை தலை­ந­க­ராக கொண்ட தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இரு தரப்­பி­னரும் உடன்­பாடு கண்­டுள்ளோம் என்றும் அஸ்­ஸலாம் அல் அஹமத் குறிப்­பிட்­டுள்ளார்.

இரு தரப்­புக்­கு­மி­டையில் இணக்­கப்­பாட்டை எட்டச் செய்­வதில் எகிப்து வகித்த உறு­தி­யான பங்கை தாம் வர­வேற்­ப­தாக பேச்­சு­வார்த்­தையில் ஹமாஸ் தரப்­புக்கு தலைமை வகித்த சாலிஹ் அல் அரோரி குறிப்­பிட்­டுள்ளார்.

இவ் உடன்­ப­டிக்கை கைச்சாத்திடப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் பாராளுமன்ற ஜனாதிபதி மற்றும் தேசிய கவுன்சில் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நடை­பெறும் வரை இரு தரப்பும் இணைந்த இடைக்­கால அர­சாங்கம் ஒன்றை அமைப்­ப­தற்கும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. 
பலஸ்தீன் நாட்டின் இரு தரப்­புக்­க­ளான பதாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்­புக்கும் இடை­யி­லான சம­ரசப் பேச்­சு­வார்த்­தைகள் எகிப்து தலை­நகர் கெய்­ரோவில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஆரம்­பிக்­கப்­பட்­டன. 

மேற்­கு­லகின் மைய­நீ­ரோட்ட செல்­வாக்கு நிரம்­பி­ய­தாக கரு­தப்­படும் பதாஹ் கட்­சி­யா­னது, மேற்­கு­லகம் மற்றும் இஸ்­ரே­லினால் தீவி­ர­வாத அமைப்பு என்று வர்­ணிக்­கப்­படும் ஹமா­ஸிடம் 2007 இல் பலஸ்­தீனின் காஸா பகு­தியின் ஆளு­கையை இழந்­தது.

 கடந்த மாதம் எகிப்தின் மத்­தி­யஸ்­தத்தின் கீழ் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையில் காஸா பகு­தியின் ஆளும் அதி­கா­ரத்தை பதாஹ் கட்­சியை சேர்ந்த பலஸ்­தீன ஜனா­ப­தி­பதி மஹ்மூத் அப்­பா­ஸிடம் கைய­ளிக்க ஹமாஸ் ஒப்­புக்­கொண்­டது. 
இரு­த­ரப்­பு­களின் இணக்­கப்­பாடு தொடர்பில் மேல­திக முன்­னெ­டுப்­புக்­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அமு­லுக்கு கொண்­டு­வரும் வகையில் மத்­தி­யஸ்த நாடான எகிப்து 3 நாள் பேச்­சு­வார்த்­தை­யொன்றை ஆரம்­பித்­தது.  “தேசிய இணக்­கப்­பாடு தொடர்பில் கெய்ரோ பேச்­சு­வார்த்­தையில் உறு­தி­யா­னதும் தீர்க்­க­மா­ன­து­மான முடி­வுகள் பெறப்­படும்” என ஹமாஸ் உய­ர­தி­காரி இஸ்ஸத் ரஷிக் பேச்­சுக்கள் ஆரம்­பிக்­கப்­பட முன்னர் தெரி­வித்­தி­ருந்தார். 


“பலஸ்­தீ­னிய மக்­களின் ஐக்­கி­யமும் தேசிய இணக்­கப்­பா­டுமே நாம் முன்­னேற்ற பாதையில் செல்­வ­தற்­கான தந்­தி­ரோ­பாயம்” என பதாஹ் கட்­சியின் முக்­கிய தலை­மை­களில் ஒரு­வ­ரான அஸ்ஸாம் அஹ்மத் தெரி­வித்­துள்ளார். காஸாவில் இயங்கி வரும் அமைச்­சுக்­களின் நிர்­வாகம் தொடர்­பிலும் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. 

2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஹமாஸ் அமைப்­பினால் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்ள 40,000 தொடக்கம் 50,000 பணி­யா­ளர்­களின் நிலைப்­பாடு தொடர்­பிலும் பேச்­சு­வார்த்­தையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. 

காஸா பிராந்­தி­யத்தின் பாது­காப்பு விவ­கா­ரமும் கலந்­து­ரை­யா­டலில் முக்­கிய இடம் பெற்­றி­ருந்­தது.   இப் பேச்­சுக்­களைத் தொடர்ந்து காஸா பொலிஸ் படை­ய­ணியில் பதாஹ் ஆத­ர­வான 3,000 பாது­காப்பு அதி­கா­ரிகள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

காஸா பகு­தியில் வாழும் 2 மில்­லியன் மக்கள் உல­குடன் தரை வழித் தொடர்பை பேணும் வகையில் அமைந்­துள்ள ஒரே­யொரு எல்லைக் கட­வை­யான ரபா, ஹமாஸ் ஆத­ரவு அதி­கா­ரி­க­ளினால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­வ­தற்கு பதி­லாக பதாஹ் ஆத­ரவு அதி­கா­ரி­க­ளினால் நிர்­வ­கிக்­கப்­பட வேண்டும் எனவும், நிர்­வாக நட­வ­டிக்­கைகள் ஐரோப்­பிய எல்லை ஒன்­றிய முக­வ­ர­கத்­தினால் மேற்­பார்வை செய்­யப்­பட வேண்டும் எனவும் பதாஹ் பிர­தி­நிதி அஹ்மத் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.   

பலஸ்­தீனின் இரு­த­ரப்­புக்கும் இடையில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களை “போலி­யான, சூட்­சுமம் நிறைந்த பேச்­சு­வார்த்தை” என வர்­ணித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யகு, ஹமாஸ் இரா­ணுவ அமைப்பின் ஆயுதக் களைவு தொடர்பில் இஸ்­ரேலின் கோரிக்­கையை மீளவும் வலி­யு­றுத்­து­வ­தா­கவே இப்­பேச்­சு­வார்த்தை அமைந்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ளார். எனினும், இது தொடர்பில் கருத்துத் தெரி­வித்­துள்ள ஹமாஸ், இப்­பேச்­சு­வார்த்தை தமது ஆயுத களைவு தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்­களை உள்­ள­டக்­காது என தெரி­வித்­துள்­ளது. 

காஸா பகு­தியின் நிர்­வாக அதி­கா­ரங்­களை பதாஹ்­விடம் மீளக் கைய­ளிக்க ஹமாஸ் ஒப்­புக்­கொண்­டுள்­ள­மை­யா­னது ஹமாஸின் பாரிய பின்­ன­டை­வாக கரு­தப்­ப­டு­கி­றது. ஹமாஸின் முக்­கிய நிதி மூல­மான கட்டார் பிராந்­திய நெருக்­க­டி­களில் சிக்­கி­யி­ருப்­பதும் இம்­முன்­னெ­டுப்­புக்கு வழி­வ­குத்த முக்­கிய கார­ணி­யாக கரு­தப்­ப­டு­கி­றது. ஹமாஸ் அமைப்பு நிதி­நெ­ருக்­கடி மற்றும் அர­சியல் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டல்­களை எதிர்­நோக்க வேண்­டி­யேற்­படும் எனும் அச்­சமும் ஏது­வான கார­ணி­யாக அமை­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

காஸா எல்­லை­களின் நிர்­வாக அதி­காரம் பதாஹ் ஆத­ரவு அதி­கா­ரி­க­ளிடம் மீளக் கைய­ளிக்­கப்­படும் நிகழ்­வா­னது, இஸ்ரேல் மற்றும் எகிப்தின் எல்லைக் கட்­டுப்­பா­டு­களை இல­கு­ப­டுத்­து­வ­தாக அமை­வ­தோடு விரைவில் காஸா பகு­தியின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு அது வித்­திடும் என ஹமாஸ், பதாஹ் ஆகிய இரு தரப்பும் நம்­பிக்கை வெளி­யிட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பாரா­ளு­மன்ற தேர்தல் நடாத்­து­வ­தற்­கான காலப்­ப­கு­தியை திட்­ட­மி­டு­வது தொடர்­பிலும், இஸ்­ரே­லு­ட­னான சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு பொறுப்­பான பலஸ்­தீன விடு­தலை அமைப்பின் (PLO) மீள் நிர்­மாணம் தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. 

இறு­தி­யாக 2006 இல் இடம்பெற்ற பலஸ்தீன பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் அதிர்ச்சி வெற்றியை பெற்றிருந்தது. ஹமாஸின் இவ்வெற்றியானது ஹமாஸ், பதாஹ் இடையே அரசியல் முறுகல் நிலையை அதிகரிக்கச் செய்தது எனவும், இதன் விளைவாகவே 2007 இல் காஸா உள்ளக கிளர்ச்சி ஏற்பட்டதாகவும் கருதப்படுகிறது. 

காஸா மற்றும் மேற்கு கரையின் நிர்வாக அதிகாரங்களை இரு தரப்புக்கும் இடையே பகிர்ந்தளிப்பது மற்றும் இருதரப்புக்கும் இடையே சமரச இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் எகிப்து பலமுறை முயற்சிகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. எவ்வாறு இருப்பினும் யஹூதிகள் ஓடி ஒளியும் நாள் தொலைவிலில்லை..انشا ا الله...

    ReplyDelete

Powered by Blogger.