Header Ads



ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை, வாபஸ் பெறமாட்டேன் - சிராஸ் நூர்தீன் திட்டவட்டம்


பொதுபல சேனா செயலாளர் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை ஒருபோதும் வாபஸ் வாங்கப் போவதில்லையென மூத்த முஸ்லிம் சட்டத்தரணியும், முஸ்லிம் சமூக ஆர்வலரும், கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளன செயலாளருமான சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.

ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறப் போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சிராஸ் நூர்தீனிடம் தொடர்புகொண்டு Jaffna Muslim கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்,

அவர் மேலும் கூறியதாவது,

ஞானசாரர் தொடர்புடைய வழக்குகளை சட்டமா அதிபரே கையாள்கிறார். முஸ்லிம் சமூகத்தின் நலன்களின் மீது அக்கறை கொண்ட ஒரு சட்டத்தரணியே நான். சட்டத்தரணி என்றவகையில் என்னால்கூட ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கமுடியாது.

முஸ்லிம் சமூகம் என்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த நம்பிக்கை காற்றில் பறக்கும் படியாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் படியாகவோ எனது செயற்பாடுகள் ஒருபோதும் அமையாது.

மேலும் இங்கு சகலரும் அறியவேண்டிய ஒருவிடயம் உள்ளது.

அதாவது ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து, முஸ்லிம் சட்டத்தரணிகளாகிய நாம் தொடுத்த இந்த வழக்கினாலேயே,  ஞானசாரர் ஓரளவுக்கேனும் அமைதியாகவுள்ளார்.

இந்த வழக்குகளை நாம் தொடுத்திராவிட்டால், ஞானசாரரின் ஆட்டம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

அத்துடன் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கிவிட்டால், அவர் திருந்தி விடுவதற்கான எத்தகைய உத்தரவாதங்களும்  நம்மிடம் இல்லை. 

இந்தநிலையில் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்குவது எந்தவகையில் நியாயம்..?

எனவே ஞானசாருக்கு எதிராக, நாம் தொடுத்த வழக்குகளை வாபஸ் வாங்கமாட்டோம் என்பதை முழு முஸ்லிம் சமூகத்திற்கும் மிகுந்த பொறுப்புடனும், திட்டவட்டமாகவும் கூறிக்கொள்ள விரும்புகிறோம் எனவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சிராஸ் நூர்தீன் மேலும் தெரிவித்தார்.

10 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்!
    சிராஸ் நூர்தீன் அவர்களின் ஈருலக வாழ்வையும் அள்ளாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமின். அரசியல் தலைவர்களின் நம்பிக்கைத்துரோகங்களுக்கு மத்தியில் இவரதுநோக்கும் போக்கும் பாராட்டுக்குரியது. எம்மாலான அத்தனை பங்களிப்புக்களையும் வழங்கி ஊக்குவித்தது அவரது இருப்பை உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

    ReplyDelete
  2. ماشا الله இந்த தைரியம்தான் வெற்றியையும், உரிமைகளையும் நமக்கு அளிக்கும். இதேசெயெல் நம் அனைத்து விடயங்களிலும் இருக்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம்...

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் மேலான பாதுகாப்பை வழங்குவானாக ஆமீன்

    ReplyDelete
  4. Hats off to Siraj Nooruddeen for your courageous bold firm resolve to champion this campaign forward against this scourge .

    MaashaAllah .

    ReplyDelete
  5. அல்லாஹ் உங்களயும் நமது சமூகத்தையும் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  6. மா ஷா அல்லாஹ் மிக்க சந்தோசம்

    ReplyDelete
  7. I think muslim leaders will withdraw all the allegation after the meeting with gnana thero regarding the new 13th ammendment.
    It is a business strategy.
    And kind request for the all muslim leaders that after withdrew the case against BBS who attacks the muslims, don't forget to say god is great.
    It is better to do the prostitution business rather than wasting on politics

    ReplyDelete
  8. அல்லாஹ் இந்த சட்டத்தரணி மூலம் அவனது தீனை பாதுகாக்கின்றான்
    அல்ஹம்து லில்லாஹ்
    கூலித் தொழில் செய்பவர்கள் எஜமானர்களை பாதுகாக்கின்றனர்

    ReplyDelete
  9. அல்லாஹ் இந்த சட்டத்தரணி மூலம் அவனது தீனை பாதுகாக்கின்றான்
    அல்ஹம்து லில்லாஹ்
    கூலித் தொழில் செய்பவர்கள் எஜமானர்களை பாதுகாக்கின்றனர்

    ReplyDelete
  10. Masha allah.you are great sir. We pray for you and your all success.

    ReplyDelete

Powered by Blogger.