Header Ads



பொதுபல சேனாவுடன், முஸ்லிம் தரப்பு என்ன பேசியது..?


(AAM. Anzir)

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாகிவரும் நெருக்கடி நிலையை எதிர்கொள்ளவும், சிறியசிறிய இனவாத அமைப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்குடனே முஸ்லிம் தரப்பு பொதுபச சேனாவுடன் பேச்சில் ஈடுபட்டுள்ளது.

அந்தவகையில் இப்பேச்சில் பங்கேற்றுள்ள முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் பகிர்ந்துகொண்ட முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம்.

முஸ்லிம் கவுன்சிலானது ஆரம்பத்திலிருந்தே தமது உயிர்களையும் பொருட்படுத்தாது எதிர்க்க வேண்டிய விடயங்களை எதிர்த்து வருகிறது. அசின்விராதுவின் இலங்கை வருகையை நாம் பகிரங்கமாக எதிர்த்தோம். அந்த மேடையில் ஞானசாரர் எம்மை பார்த்துக் கொள்வோம் என்றுகூட எச்சரிக்கை விடுத்தார்.

இன்று அதே ஞானசாரருடன் முஸ்லிம்களாகிய நாம், வேறு பல முஸ்லிம் தரப்புகளுடனும் இணைந்து பேச்சில் ஈடுபடுகிறோம். 

இதுவரை ஞானசாரருக்கும், பொதுபல சேனாக்கும் இஸ்லாம் தொடர்பிலும், முஸ்லிம்கள் பற்றியும் இருந்த சந்தேகங்களுக்கு எம்மால் முடிந்த தெளிவை வழங்கிவருகிறோம்.

ஞானசாரருக்கு நேர்வழி கிடைக்க வேண்டுமென்று அல்லாஹ் நாடியிருந்தால், அந்த நேர்வழி அவருக்கு கிடைத்தே தீரும். அதை யாராலும் தடுக்க முடியாது.

மேலும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையை நாம் சரிவர புரியவேண்டும். டென்சனை குறைக்க வேண்டிய தேவையுள்ளது. அதன்பொருட்டு பொதுபல சேனாவுடன் பேசினோம். ஞானசாரருடன் ஒரு மேசையில் அமர்ந்து கலந்துரையாடினோம்.

இப்பேச்சுவார்த்தைகளில் ஞானசாரருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறுவது பற்றி அவரோ அல்லது நாங்களோ பேசவில்லை. முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கவோ அல்லது ஞானசாராரை தப்பிக்கவைக்கும் நோக்கமோ எம்மிடமில்லை. இதில் தெளிவாக உள்ளோம். சந்திப்பில் பங்கேற்கும் முஸ்லிம் சகோதரர்கள் எவருக்கும், அந்த நோக்கம் கொஞ்சமேனும் இல்லை.

நாட்டு முஸ்லிம்களுக்கு சட்டப் பாதுகாப்புக்கூட உத்தரவாதமற்ற நிலையில், மிகப்பெரும் இனவாத அமைப்புடன் பேசுவது முஸ்லிம்களுடைய எதிர்காலத்திற்கு சாதகமானது. தூரநோக்குடன் சிந்திப்பவர்கள் இதை புரிந்துகொள்வர்.

நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பல வடிவங்களில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், குறைக்கவும் பொதுபல சேனாவுடனான முஸ்லிம் தரப்பின் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும். ஞானசாரரிடம் இந்தப் பேச்சின் பின்னர் சிறுமாற்றத்தை அவதானிக்க முடிகிறது. பேச்சின் பங்கேற்றவன் என்றவகையிலும், அவரது செயற்பாடுகளை கூர்ந்து கவனிப்பவன் என்ற வகையிலும் கடந்த 3 வாரங்களாக இதனை அவதானிக்க முடிகிறது.

இந்தநிலையில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நமது சகோதரர்கள், மிகுந்த பொறுப்புடன் செயற்படும்படி நாம் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகிறேன். எமது விமர்சனங்கள் இப்பேச்சுக்கு பங்கம் ஏற்படுத்திவடக்கூடாது.

ஞானசாரருடனான இப்பேச்சுவார்த்தையில் உலமா சபை, முஸ்லிம் கவுன்சில் மற்றும் முஸ்லிம் சட்டத்துறை சார்ந்தவர்கள் என பலர் பங்கேற்கின்றனர்.

பொதுபல சேனாவுடன் முஸ்லிம் தரப்பு ஒரு புரிந்தணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுமா என்று கூறமுடியாவிட்டாலும்கூட இப்பேச்சுவார்த்தை நெருக்கடியை குறைப்பதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று நாங்கள் நம்புகிறோம். இதற்கு முஸ்லிம் சமூகத்திலுள்ள சகல தரப்புகளினதும் ஒத்துழைப:பு அவசியம் எனவும் அமீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் மேலும் குறிப்பிட்டார்.

11 comments:

  1. Strategic approach but not compromising Go Ahead Ameen Haji.
    Blessing in disguise for Dawa .

    MashaAllah.

    ReplyDelete
  2. கௌரவ அமீன் சேர் அவர்களே,இதைத்தான் ஒவ்வொரு முஸ்லிமும் விரும்புகிறார்கள்.நங்கள் எங்களது நாட்டில் நிம்மதியாக வாழணுமென்ற ஒரேஆசையை தவிர வேறேதுமில்லை. இதை விளங்காத நமது மேதைகள் நமது ஜம்மியத்துல் உலமாவை குறைகூறுவதும் நமது சமூக தொண்டர்களை இழிவுபடுத்துவதிலும்தான் நேரத்தை வீணடிக்கிறார்கள். எமது சமூக தொண்டர்களிடம் நாங்கள் மிக பணிவாய் கேட்டுகொள்ளுது உங்களது தூரநோக்கு சிந்தனைகளை சிதறவிடாமல் தொடர்ந்து உங்களது பணிகளை மேட்கொள்ளுங்கள்.இதுதான் நீங்களும் நமது சமூக தொண்டர்களும் சமூகத்திற்கு செய்யும் உதவி.

    ReplyDelete
  3. Mr. Ameen has done the correct thing in having meeting with BBS and let us pray and hope a good outcome. Let us find a mechanism to have frequent meetings with all other religious organisations with the aim of bridging the gap and towards a common goal.

    ReplyDelete
  4. நெருக்கடியான மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் எதிரிகளுடன் அல்லது வேண்டிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவது இஸ்லாமிய நடைமுறையாகும். இதற்கு மதினா சாசனம் சிறந்த உதாரணமாகும்.
    எனவே இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தணிப்பதற்கான மூலோபாய நடவடிக்கைகளில் ஏதேனும் ஒருதரப்பு ஈடுபடுவது பர்ளுகிபாயாவாகும்.
    அந்தவகையில் தாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் காத்திரமாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் அமைய அள்ளாஹ்வின் அருள்கிடைக்க பிரார்த்திப்போம்.
    இருப்பினும் ஆஸாத் சாலி போன்றவர்கள் சற்று வேகமாகவும் அவசரகுடுக்கையாகவும் தொழிற்படலாம். அவர்களையும் நிதானமாக கையாண்டு முடிவுகளை எட்டுவதற்கான நகர்வுகளை மேற்கொள்ள அனைவரும் பொறுமைகாத்து துஆ செய்வோம்.

    ReplyDelete
  5. Really appreciated, law & order is biosed, some groups are trying to take advantage through even a small day to day incidents to racism. We believe in Allah and showed by our beloved prophet how to tackle such situations. Good try, go ahead. Allah will guide us.

    ReplyDelete
  6. நல்ல முயற்சி இறைவன் வெற்றியை தருவானாக ஆமீன்

    ReplyDelete
  7. அரை வேக்காடுகளுக்கு தூரநோக்கு இல்லாமல் எப்போதும் ஐம்யாவையும் அது சார்ந்தவர்களையும் தூற்றுவதுதான் பொழப்பு.

    ReplyDelete
  8. It is a good move highly recommended for solving problems without political interference. Politicians always double standard. They always think, If they implement the law and order against culprits,will lose the support from Majority hardliners. In the meantime influence by internal partners so called??? Foxes. That’s why we can’t except them to solve the problems.

    Ex president MR also did the same mistake. He was influenced by same so called foxes. There for we can’t really on political parties.

    May Allah grant these people to do right things towards our community without political interference.Ameen.

    ReplyDelete

Powered by Blogger.