Header Ads



கத்தார் + இலங்கை தூதரகங்களின் கவனத்திற்கு..!

கத்தாரில் வழங்கப்படும் புது தொழிலாளர் ஒப்பந்தம் (labor contarct )

தற்போது கத்தாரில் தொழில் புரிபவர்களுக்கு வழங்கப்படும் புது ஒப்பந்தத்தில் (labor contarct) உள்ள மொழியானது சிங்களத்திலும் , அரபியிலும் காணப்படுகிறது.

ஏலவே வழங்கப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள மொழியானது ஆங்கிலத்திலும் , அரபியிலும் காணப்பட்டது. ஸ்ரீலங்கா குடி மக்களாகிய நாம், எமது நாட்டில் தாய் மொழியாக தமிழும் சிங்களமும் புழக்கத்தில் உள்ளது... இங்கே, பழைய ஒப்பந்தத்தில் ஆங்கில மொழி காணப்படுவதால் இரு மொழிகளையும் தாய் மொழியாக கொண்ட நாம் பொதுவான அடிப்படையில் ஓரளவாவது வாசித்து விளங்கக்கூடியதாக இருந்தது.

தற்போது வழங்கப்படும் ஒப்பந்தத்தில் ஆங்கில மொழிக்கு பதிலாக சிங்கள மொழி காணப்படுகிறது. எம்மவர்கள் அனைவரும் வாசித்து விளங்க முடியாது உள்ளது. ஏன் இப்படி என்று தமது கம்பெனியில் கேட்டால் அதட்கு அவர்கள் , உங்கள் தூதரகம் தான் பொறுப்பு என்று கூருகிறார்கள்.

இந்த ஒப்பந்தத்தை(Contract) சிங்களத்தில் வழங்க முடியுமாக இருந்தால் ஏன் தமிழ் மொழியில் வழங்க முடியாது ???

குறைந்ததாவெது ஆங்கில மொழியில் இருக்கலாம் அல்லவா !!!

எமது ஒப்பந்தத்தை(Contract) நாம் படித்து விளங்க முடியாமல் இருப்பது எமது தனி மனித உரிமை மீறல் அல்லவா !!!

இதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

-IRFAN-

No comments

Powered by Blogger.