Header Ads



2 சமூகங்களிடையே கைக­லப்­பு, 3 பேர் கைது, சமாதானமாக செயற்பட இணக்கம்

வத்­து­காமம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட வத்­தே­கெ­த­ரையில் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த சில­ருக்கும், முஸ்­லிம்­க­ளுக்கும் இடையில்  உரு­வான கைக­லப்­பி­னை­ய­டுத்து பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் வத்­து­காமம் பொலி­ஸா­ரினால் தெல்ெ­த­னிய நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்பட்டதைய­டுத்து நீதிவான் அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்டார்.
இச்­சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது;

 “வத்­தே­கெ­த­ரையில் உள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான ஹோட்­டலில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த மூவர் உண­வ­ருந்தச் சென்­றுள்­ளனர். அவ்­வேளை ஹோட்டல் ஊழியர் ஒரு­வ­ருக்கும், பெரும்­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கும் வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. அப்­போது கொதிநீர் பிர­யோகம் இடம்­பெற்­றுள்­ளது. காய­ம­டைந்த ஹோட்டல் ஊழியர் கட்­டு­கஸ்­தோட்டை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட மூவரே நீதிவான் நீதி­மன்றில் நேற்று முன்­தினம் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர்.

இத­னை­ய­டுத்து வத்­து­காமம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி, வத்­தே­கெ­தர ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எச்.எம்.குதூப்தீன் உட்­பட நிர்­வா­கிகள், ஜமா­லியா அஹ­தியா செய­லாளர், பாத்­த­தும்­பறை பிர­தேச சபை முன்னாள் தலைவர் எம்.எச்.நஸீம்தீன், பொல்­கொல்ல குல்­ல­கெட்­டுவ பன்­சலை விகா­ரா­தி­பதி ஆகியோர் கலந்து கொண்ட அமர்வில் சமா­தான பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றது.

வத்­தே­கெ­த­ரையில் வாழும் முஸ்­லிம்­களும், பெரும்­பான்மை இனத்­த­வர்­களும் சம்­ப­வத்தை மறந்து ஒற்றுமைப் படுவதாக இணக்கம் கண்டனர்.

இரு தரப்பு சமாதானத்தினையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான முயற்சிகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

ARA.Fareel

No comments

Powered by Blogger.