Header Ads



கடுமையாக போராடிய றிசாத்தும், ஹிஸ்புல்லாவும் அடிவாங்குவதிலிருந்து தப்பினர்

நேற்று -20-  நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாத்தும், ஹிபுல்லாவும் மாகாணசபைத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகமான விடயங்களை நீக்குவதற்கு கடுமையாக போராடியுள்ளனர்.

நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு சபாநாயகருடன்  முதற்சந்திப்பு ஆரம்பமாகியுள்ளது.

இதையடுத்து அவர்கள் இரவு 9 மணிவரை பாராளுமன்றத்தில் இருந்து  மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாதகங்கள் வந்துவிடலாகாது என்பதற்காக கடுமையாக முயன்றுள்ளனர்.

நேற்று மாலை 6.30 மணிக்கு இதுதொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த போதும் இரவு 8.30 மணிக்கே வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. 

இவர்கள் இருவரினதும் பிடிவாதத்தை கண்ட  ஆளும்கட்சி எம்.பி.க்கள் இவர்கள் இருவருடனும் கடுமையாக நடந்துள்ளனர்.

ஒருகட்டத்தில் அமைச்சர் ராஐத்த சேனாரத்தினா உள்ளிட்ட சிலர்  றிசாத்தையும்,  ஹிஸ்புல்லாவையும் தாக்க முயன்றதாகவும் அறியவருகிறது.

கடும் குரலில் இவர்களுக்கிடையில் வாக்குவாதமும் நடைபெற்றுள்ளது.

ஒரு கட்டத்தில் ஹிஸ்புல்லாவை நோக்கி தாங்கள் தந்த தேசியப் பட்டியலை பெற்றுக்கொண்டு சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு மாற்றமாக முஸ்லிம்களுக்கு ஆதரவாக மாத்திரம் செயற்படுகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இவற்றிக்கு அப்பால் பிரதமர் ரணில் உள்ளடங்கலாக பிரதான அமைச்சர்கள், மாகாண சபைகள் திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு நல்கும்படி கடும் அழுத்தங்களை பிரயோகித்ததாகவும் அறியவருகிறது.

இவர்கள்  இருவரினதும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளினதும் முயற்சியினால் பிரதான 4 விடயங்களை மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில், உள்ளீர்ப்புச் செய்யமுடியுமாக இருந்துள்ளது.

பல்லின ஆசன அங்கத்தவர், எல்லை நிர்ணய ஆணைக்குழு மூலம் 4 மாதத்திற்குள் திர்வை எட்டுதல், பிரதமர் அடங்கலான  4 பேர் கொண்ட சிறப்புக் கமிட்டி மூலம் அநீதி இடம்பெறாதவாறு செயற்படுதல் மற்றும் கலப்பும், விகிதாசாரமும் கலந்த 50 க்கு 50 என்பதிலும் சட்டம்  இயற்றப்பட்டுள்ளது.

இந்த மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமானது முஸ்லிம்களுக்கு பாதகம் இல்லையென்று சொல்லமுடியாவிட்டாலும் முஸ்லிம்களுக்கு ஏற்படவிருந்த பல பாதகங்களை குறைத்துள்ளதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் jaffna muslim இணையத்திற்கு சுட்டிக்காட்டினர்.

5 comments:

  1. இந்த சட்டம் என்ன முந்தநாள் இரவா உருவாக்கபட்டது? கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உருவாக்கினார்கள்.

    அரசில் அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு இது கூட தெரியவில்லையா?

    ஆனால், இதில் joke என்னவெனில், தங்களின் முட்டாள் தனத்தை கூட வைத்து அனுதாப அரசியல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

    ReplyDelete
  2. இதை தடுப்பதற்க்கான பல முன்னெடுப்புகள் நீண்ட காலமாகவே மேற்க்கொள்ளப்பட்டு வந்தது.

    இருதி கட்டம் வரையும் அதே நிலைப்பாட்டில் இருந்து போராடியதால் இந்த அளவுக்கு சரி சாத்தியமாகியுல்லது.

    இது உம்மை போன்று ஒரு பக்க சிந்தனையுள்ளவர்களுக்கு புரியாது.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ஒன்றும் போராடி 50-50 ஆக்க வில்லை.

      இது வியாபார தந்திரம்". 60-40என்றுசொன்னால் தான் 50-50 க்கு உங்களுக்கு விற்க முடியும் என ரணிலுக்கு தெரியாதா?.

      இதனால், அடுத்த தேர்தலில் முஸலிம் MPகள் குறையும், சிங்கள MPகள் அதிகரிக்கும்.
      அதன் பின்னர், உங்கள் ஆதாரவு இல்லாமலே 80-20. Or 100-0 முறையிலோ மாற்றிவிடுவார்கள். அப்போது தற்போதய முஸலிம் 20 MPகள் 4 ஆகிவிடுவார்கள்.

      Delete
  3. இந்த சட்டமூலம் வடக்குகிழக்கு தமிழருக்கு வரப்பிரசாதம்.கண்டவனெல்லாம் எம் ஊர்களுக்கு வந்து எம்மை நாட்டாமை செய்கிறான்.இனி அப்படி நடக்காது.நாடாளுமன்ற தேர்தல் 80% 20% எனும் கலப்பிர் இடம் பெறவேண்டும்.

    ReplyDelete
  4. நீண்டகாலமாக எதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது வில்பத்து வர்தமானி விவகாரம் வந்த பொழுது வீதிக்கிறங்கி முகாம் அடித்து மாதக்கணக்கில் எதிர்ப்பினை மேற்கொள்ளத்தூண்டியவர்களுக்கு இந்த வரலாற்று துரோகத்திற்கு எதிர்ப்புத்தெறிவிக்க தோனவில்லையா.......
    இறைவன் அனைத்தையும் நன்கறிந்தவான் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கின்றனரா அல்லது உண்மையில் பிரயத்தனங்கள் மேற்கொண்டனரா என்று

    ReplyDelete

Powered by Blogger.